வரும் 27ம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில், சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்.... அதிர்ச்சியில் அமமுகவினர்
2021-01-20@ 16:56:39

பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு சிறைக்கு விரைந்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017ம் பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவடைவதால், அவரை அன்று விடுதலை செய்வதாக கர்நாடக சிறை துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவக்குழு அவரது அறைக்கு விரைந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து அவர் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சசிகலாவிற்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் இருப்பதாகவும் அதற்கு பல முறை சிறை மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே வருகிற 27ம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ள நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
சசிகலாமேலும் செய்திகள்
FasTag முறையால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும்!: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!!
சென்னை தி.நகரில் இல்லத்தில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும்!: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
வீரியம் குறையாத கொரோனா!: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேர் பாதிப்பு..மேலும் 91 பேர் உயிரிழப்பு..!!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்..? டெல்லி எல்லையில் 100-வது நாளை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்