மேலும் 5 லட்சம் தடுப்பூசி இன்று வருகிறது: தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
2021-01-20@ 01:52:34

சென்னை: தமிழகத்தில் மேலும் 5 லட்சம் தடுப்பூசி இன்று வருவதாகவும், இதுவரை யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இதன்பிறகு அவர் அளித்த பேட்டி : கொரோனா தடுப்பூசி நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரிக்கிறது. இது வரை தமிழ்நாட்டில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. 18ம் தேதி மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
சில மாநிலங்களில் எல்லா நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தில் தொய்வின்றி வாரம் முழுவதும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்துக்கு கூடுதலாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று வருகிறது. சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து அடுத்த பிரிவு முன்களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
யோகி பாபு நடித்த மண்டேலா படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்: மத தலைவர்கள் உறுதி
எம்ஜிஆர் நகர் மயானம் ஓராண்டு இயங்காது
பிரபல தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் கொரோனா நோயாளி தற்கொலை: உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கை ஒதுக்க அரசு உத்தரவு
நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வில் தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்