லாட்டரி வியாபாரியை தேடி வந்த அதிர்ஷ்டம்: விற்காத கிறிஸ்துமஸ் பம்பருக்கு 12 கோடி பரிசு: தென்காசியை சேர்ந்தவர்
2021-01-20@ 01:51:52

திருவனந்தபுரம்: கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரியில் முதல் பரிசான 12 கோடி ரூபாய் தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்ற லாட்டரி விற்பனையாளருக்கு கிடைத்துள்ளது. கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் பரிசு 12 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் குலுக்கல் கடந்த 17ம் தேதி திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆரியா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
இதில் முதல் பரிசு 12 கோடி ‘எக்ஸ்ஜி 358753’ என்ற எண்ணுள்ள டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. இந்த டிக்கெட் தமிழக எல்லையான ஆரியங்காவில், தென்காசியை சேர்ந்த வெங்கடேஷ் நடத்திவரும் லாட்டரி கடையில் விற்பனைக்கு வந்ததாகும். நேற்று மதியம் வரை டிக்கெட் வாங்கியது யார் என்று தேடி வந்தனர். இந்நிலையில் இந்த டிக்கெட்டை வாங்கியது தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்று தெரிய வந்தது. இவர் மோட்டார் பைக்கில் லாட்டரி விற்பனை செய்து வருகிறார்.
வெங்கடேஷிடம் லாட்டரி டிக்கெட் வாங்கி ஆரியங்காவு முதல் புனலூர் வரை விற்பனை செய்துவருகிறார். இந்த நிலையில் இவரிடம் விற்காமல் இருந்த ஒரு லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசான 12 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. லாட்டரியை நேற்று ஷரபுதீன் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி துறை அலுவலகத்தில் அதன் இயக்குனர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். ஏஜென்ட் கமிஷன் மற்றும் வரி நீங்கலாக 7.56 கோடி ஷரபுதீனுக்கு கிடைக்கும். வளைகுடா நாட்டில் பணி புரிந்து வந்த ஷரபுதீன் சில வருடங்களுக்கு முன் ஊருக்கு திரும்பி லாட்டரி விற்பனை செய்து வந்தார். இவருக்கு சபீனா என்ற மனைவியும் பர்வேஸ் முஷாரப் என்ற மகனும் உள்ளனர்.
மேலும் செய்திகள்
எங்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி டுவிட்.!!!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி: விரைந்து குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து.!!!
நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி.!!!
மராட்டியத்தில் பிரக் ஃபார்மா கிடங்கில் ரெம்டெசிவிர் மருந்து பதுக்கல்; பதுக்கலுக்கு உதவும் பாஜக: மராட்டிய அரசு பகிரங்க குற்றச்சாட்டு
கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.. தேசிய அளவில் டிரெண்டாகும் #ResignModi ஹேஷ்டேக்
கடந்த ஆண்டைப்போன்று மீண்டும் அரங்கேறும் பரிபாதக் காட்சிகள்: நெடுஞ்சாலைகளில் நடக்கத் தொடங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!