பாஜ ஒட்டிய பேனரை கிழித்த அதிமுக பிரமுகர்
2021-01-20@ 01:02:19

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் பாஜவினர் ஒட்டும் பேனர்களை கடந்த 3 மாதங்களாக மர்ம நபர் கிழித்து வருவதாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன் அந்த நபரை பிடிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாஜவினர் ஒட்டிய பேனரை மர்ம நபர் கிழிப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. உடனே இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் வடசென்னை மாவட்ட பாஜ ஊடகப்பிரிவு தலைவர் நவீன் பிரகாஷ் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் விசாரணை செய்ததில் அந்த மர்ம நபர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபாகரன். அதிமுக நிர்வாகி என்பது தெரியவந்தது. பாஜவினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறினர்.
அதன்பேரில் அந்த வாலிபரை போலீசார் அழைத்து விசாரணை செய்வதாக கூறினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவும் பாஜவும் கூட்டணி உடன்படிக்கை பேசி வரும் நிலையில் பாஜ ஒட்டிய பேனரை அதிமுக பிரமுகர் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்னல்களை மட்டுமே அனுபவித்தோம்
திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு: அதிமுகவினர் எதிர்ப்பு
வெள்ளை சட்டைக்கு கிராக்கி
நாங்க சிங்கக் கூட்டம் டிடிவி குள்ளநரிக் கூட்டம்: போட்டு தாக்கும் அமைச்சர் ஜெயக்குமார்
இலை கட்சியில் ஒரு தொகுதிக்கு 3 பேர் சண்டை
உள்ளூர்காரங்களுக்கு சீட் கொடுங்கப்பா... சுவரொட்டி ஒட்டி நூதன கோரிக்கை
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!