வெற்றி கோப்பையை பெறுவதற்கு முன் நேதன் லயனை கெளரவப்படுத்திய ரஹானே..! இதயங்களை வென்ற இந்திய கேப்டன்
2021-01-19@ 17:20:56

காபா: ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, வெற்றி கோப்பையை பெறுவதற்கு முன் நேதன் லயனின் சாதனையை கருத்தில்கொண்டு அவரை கௌரவப்படுத்திய செயல் அனைவரது இதயங்களையும் வென்றது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் இலக்கை எதிர்த்து மிகப்பிரமாதமாக ஆடிய இந்திய அணி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை காபா மைதானத்தில் பதிவு செய்தது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது. தொடர்ச்சியாக 2வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றி பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது.
கடந்த 1988 முதலே காபா மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி ஆஸி., ஸ்பின்னர் நேதன் லயனுக்கு 100வது டெஸ்ட் போட்டி. சமகாலத்தின் லெஜண்ட் ஸ்பின்னரான லயனுக்கு 100வது டெஸ்ட் சரியாக அமையவில்லை.
ஆனாலும், 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டிய நேதன் லயனை ரஹானே கௌரவப்படுத்திய செயல், ரஹானே மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது. தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டனான ரஹானே, வெற்றி கோப்பையை வாங்குவதற்கு முன்பாக, நேதன் லயனை அழைத்து, இந்திய அணியின் சார்பாக கேப்டன் என்ற முறையில் கையெழுத்திட்ட இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியை நேதன் லயனுக்கு வழங்கி கௌரவித்தார். அதன்பின்னர் தான் வெற்றி கோப்பையையே வாங்கினார்.
மேலும் செய்திகள்
பிரித்வி ஷா இரட்டைச் சதம்
3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டி20 தொடரில் மீண்டும் ஆஸியை வீழ்த்திய நியூசி
3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.!!!
3வது டெஸ்ட் போட்டி: அக்சர், அஷ்வின் சுழலில் மூழ்கியது இங்கிலாந்து: இந்தியா நிதான ஆட்டம்
விஜய் ஹசாரே டிராபி: தமிழகம் மீண்டும் ஏமாற்றம்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!