பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா!!
2021-01-19@ 16:48:24

பெய்ஜிங்: உலகம் வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை சீனா போர்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சீனாவில் கிளேஷியர் எனப்படும் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க விஞ்ஞானிகள் போர்வைகளை பயன்படுத்தி வருகின்றனர். பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க உயர் தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஜியோடெக்ஸ்டைல் போர்வைகள், சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக இருக்கும்.
இதை பனிக்கட்டிகளின் மேல் போர்த்துவதால் பனிக்கட்டி உருகும் வேகம் குறையும். மேலும் பனிக்கட்டிகளை பாதுகாக்கும் கேடயமாகவும் இந்த போர்வைகள் இருக்கும் என சீன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.ஆனால் அது ஆதாரப்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.வாங்க் பெய்டெங் தலைமையிலான ஆய்வாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக இதுகுறித்து ஆய்வுகளை நடத்தி வந்தனர். அந்த முடிவுகளின்படி கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இதை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். சீனாவிலுள்ள சிச்சூவான் மாகாணத்தின் டாகு பனிப்பாறைகள் ஜியோடெக்ஸ்டைல் போர்வைகளை 500 சதுர மீட்டர் அளவிறகு உருவாக்கி இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்க!: அதிபர் ஜோ பைடன் ஆணை..!!
கொழும்பு துறைமுக கன்டெய்னர் முனையம்: மீண்டும் இந்தியாவுக்கே கொடுத்தது இலங்கை
பயணிக்கு உடல்நிலை பாதிப்பு: இந்திய விமானம் பாக்.கில் அவசரமாக தரையிறக்கம்
எச்1பி விசா தடை ரத்து பைடன் அரசு குழப்பம்: நீக்கலாமா? வேண்டாமா?
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் சிக்கல்
ஜோ பைடனின் 100 நாள் செயல் திட்டத்திற்கு பலன்!: அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருவதாக புள்ளி விவரம் தகவல்..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்