SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காத்திருக்கும் சவால்

2021-01-19@ 00:30:57

நீண்ட இழுபறிக்கு பின்னர் ஜோ பிடென் அமெரிக்க அதிபராக நாளை (ஜன. 20) பதவியேற்க உள்ளார். அனைத்திலும் முன்னுதாரணமாக இருந்த அமெரிக்கா, தற்போது பின்னோக்கி செல்கிறது. மக்களின் கொந்தளிப்புதான் பிடெனுக்கு அபார வெற்றியை தந்தது. திசைமாறிச் செல்லும் அமெரிக்காவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பிடெனுக்கு உள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து, பொருளாதாரத்தை மீட்பதுதான் முதல் சவால்.
இப்போதுவரை அமெரிக்கா - இந்தியா இடையே நல்லுறவு இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மேம்பட்டு வருகிறது. டிரம்ப்புடன் தொடர்ந்த அதே நட்பு, பிடெனுடன் தொடர வேண்டியது அவசியம்.

சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக இருந்து வரும் அமெரிக்கா, இனிவரும் காலங்களில் அதை கடைபிடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நீண்ட அரசியல் அனுபவம் உள்ள பிடென் சர்வதேச விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நுணுக்கமாக கையாள வாய்ப்பு உள்ளது. கொரோனா நெருக்கடி காலத்திலும் பொருளாதாரத்தில் சீனா அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால் சீனாவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அமெரிக்கா நடந்து கொள்ளவேண்டும். சீனாவுக்கு நேரடியாக பிடென் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மாறாக, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டால், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விஷயங்களில் பாகிஸ்தான், சீனா மூக்கை நுழைக்கலாம். இந்தியா இந்தத் தருணத்தில் ராஜதந்திர யுக்திகளை கையாளவேண்டியது அவசியம்.

பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன்  எவ்வித கொள்கையை பிடென் கடைபிடிக்க போகிறார் என்பதை இந்தியா உன்னிப்பாக கவனிக்க வேண்டும். முக்கியமாக, பிடென் முழுநேர அரசியல்வாதி என்பதால், ராஜதந்திர முறையை கையாள வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.  பிடென் அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வாய்ப்பு உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சில அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு துவக்கத்திலேயே மேற்கொள்ள வேண்டும்.

‘நம்பர் 1’ இடத்தை தக்கவைக்க பல சவால்களில் அமெரிக்கா வெற்றி பெறவேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை பிடென் எப்படி  பூர்த்தி செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். புதிய நட்பு நாடுகள் நம்பிக்கை தந்தாலும், நீண்டகால நட்புகள் தான் எப்போதும் உதவியாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அமெரிக்கா உடனான உறவை மேம்படுத்த வேண்டும். அதேவேளையில் ரஷ்யாவுடன் நல்லுறவை வலுப்படுத்தும் முயற்சியிலும் மத்திய அரசு இறங்க வேண்டியது கட்டாயம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 06-03-2021

    06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்