காந்தி மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து குறைந்தது
2021-01-18@ 15:25:40

பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு பகுதியில், வாரம் இருமுறை வாழைத்தார் ஏலம் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து உள்ளூர் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாழைத்தாரை வாங்கி செல்கின்றனர். இதில், நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், பண்டிகை காலம் என்பதால் முன்கூட்டியே வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் ஏலத்தில் வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது. நேற்று 800 வாழைத்தார்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதில், பூவம் பழம் ரூ.200 முதல்ரூ.600 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.150 முதல் ரூ.550 வரையிலும், மோரிஸ் ரூ.150 முதல் ரூ.500 வரையிலும், செவ்வாழை ரூ.300 முதல் ரூ.1300 வரையிலும், நேந்திரன் கிலோ ரூ.18க்கும், கதளி கிலோ ரூ.32 க்கும் ஏலம் போனது. வாழைத்தார் வரத்து குறைவாக இருந்ததால், கடந்த வாரத்தை விட தார் ஒன்றிற்கு ரூ.50 அதிகரித்து விலை போனது என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 47 பேருக்கு கொரோனா
ராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
திருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு
ஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்..! ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
குடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மா, வாழைகள் சேதம்: விவசாயிகள் வேதனை
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்