இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம்: 13,788 பேர் பாதிப்பு, 14,457 பேர் டிஸ்சார்ஜ், 145 பேர் உயிரிழப்பு
2021-01-18@ 09:28:28

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில், அதே போல், பாதிப்பு 1.05 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,788 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,05,71,773 ஆக அதிகரித்துள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 145 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,52,419 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,457 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,02,11,342 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,08,012 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 96.58% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.98% ஆக குறைந்துள்ளது.
மேலும் செய்திகள்
சித்தூரில் நோய் தொற்று அபாயம் நீவா நதியில் கலக்கும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சுழி தொகுதி தேர்தல் விவகாரம்!: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
கும்பமேளாவில் பங்கேற்ற 19 கொரோனா நோயாளிகள் உத்தராகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் :பீதியில் வடஇந்தியா!!
டெல்லியில் இன்று இரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று நேரத்தில் வெளியிடுகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா. பிரதமர் மோடி அவசர ஆலோசனை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறாரா ?
கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் ஒரு வாரம் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த திட்டம்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!