8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
2021-01-18@ 01:35:18

சென்னை: அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு, அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பிப்ரவரி 21ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதியுடன் நிறைவடைந்தது. மாணவர்களின் விவரங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த 12ம் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவேற்ற தேர்வுத் துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது என்எம்எம்எஸ் தேர்வு விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
8th class student scholarship eligibility test application opportunity extension 8ம் வகுப்பு மாணவர் உதவித் தொகை தகுதி தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்புமேலும் செய்திகள்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு
தண்டவாளத்தில் இரும்பு ராடு வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி: 2 பேர் கைது
தாம்பரம் அருகே சிக்னல் பழுதால் ரயில் சேவை பாதிப்பு
தொலைதொடர்பு ஊழியர்களின் வீட்டுமனை திட்டத்திற்காக வாங்கிய நிலத்தை தனியாருக்கு விற்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நெடுஞ்சாலை துறையில் கணக்காளர் பணி நியமன முறைகேடு தமிழக அரசு நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு