காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி 20, 21ம் தேதி தேர்தல் பிரச்சாரம்: அதிமுக தலைமை அறிவிப்பு
2021-01-18@ 01:14:28

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி 20, 21ம் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து அதிமுக தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 20ம் தேதி புதன் கிழமை-காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 9 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, 9.45 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் பொதுக்கூட்டம் பங்கேற்கிறார்.
காலை 11.30 மணிக்கு வாலாஜாபாத் பேருந்து நிலையம் வரவேற்பு, 12.30 மணிக்கு அண்ணா நினைவு இல்லம் மரியாதை செலுத்துதல், 1 மணிக்கு காந்தி சாலை, தேரடி வரவேற்பு, பிற்பகல் 1.45 மணிக்கு ஜென்சி காஞ்சிபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டல் நெசவாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பிரமுகர்களுடன் சந்திப்பு, 4.15 உத்திரமேரூர் பேருந்து நிலையம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுடன் சந்திப்பு, மாலை 5.30 மணிக்கு செங்கல்பட்டு பஸ் டிப்போ முதல் செங்கல்பட்டு காவல் நிலையம் வரை சாலை மார்க்கமாக பிரச்சாரம் அதை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பின்னர் 7 மணிக்கு கே.ஆர்.ஜி திருமண மண்டபம், சிங்கபெருமாள்கோவில் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுடன் சந்திப்பு இரவு 8 மணிக்கு பார்ச்சூன் ஓட்டல், சிங்க பெருமாள் கோவில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு. பின்னர் 21ம் தேதி வியாழக் கிழமை-செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 9 மணிக்கு திருப்போரூர் பேருந்து நிலையம் பொதுக்கூட்டம், 10.30 மணிக்கு புதுப்பட்டினம் குப்பம் மீனவர்களுடன் சந்திப்பு, 11.45 மணிக்கு செய்யூர் பேருந்து நிலையம் வரவேற்பு, பிற்பகல் 2.15 மணிக்கு மதுராந்தகம் பேருந்து நிலையம், தேரடி கரும்பு, பருத்தி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுடன் சந்திப்பு, மாலை 4க்கு தாம்பரம் சந்திப்பு முதல் சண்முகம் சாலை வரை சாலை மார்க்கமாக பிரச்சாரம். அதை தொடர்ந்து பொதுக்கூட்டம், மாலை 5.45 மணிக்கு பல்லாவரம் நகரம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பு நடைபெறும்.
Tags:
Kanchipuram Chengalpattu Chief Minister Edappadi 20th 21st election campaign AIADMK leadership காஞ்சிபுரம் செங்கல்பட்டு முதல்வர் எடப்பாடி 20 21ம் தேதி தேர்தல் பிரச்சாரம் அதிமுக தலைமைமேலும் செய்திகள்
தமிழகத்தில் உள்ள ஊழல் அரசு தமிழகத்திற்கு ஆபத்து; அதை ஆதரிக்கும் பாஜக பேராபத்து: மு.க.ஸ்டாலின் பேட்டி
டாலர் சிட்டியில் அதிமுகவில் கடும் மல்லுக்கட்டு
கூவத்தூரில் பட்டபாடு... பெரும்பாடு... கடம்பூர் ராஜூ பிளாஷ்பேக்
எம்எல்ஏ பேச்சால் முகம் சுழிச்ச பெண்கள்
ராகுலை கிண்டலடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கமிஷனோ கமிஷன்... ஆட்சி முடியும்போது பணத்தை அள்ளும் ஆட்சியாளர்கள்: தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர்கள் சங்க முன்னாள் தலைவர் ஜெ.கணேசன்
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்
24-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்