டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை மிரட்டி ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை: 2 பேர் கைது
2021-01-18@ 00:15:32

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் அடுத்த வெள்ளரை கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி கடையில் இருந்த எல்லப்பனிடம் மதுபானம் வாங்க வந்த 3 பேர் பணம் கொடுக்காமல் மதுபானம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதை தொடர்ந்து கடைக்குள் நுழைந்த மூவரும், எல்லப்பனை அடித்து, உதைத்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் எல்லப்பன் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மதுபான கடைக்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது குண்டு பெரும்பேடு பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சோபன் ராஜ் (30), தாமஸ் (30) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான ஸ்டீபன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:
Tasmac store supervisor intimidation liquor robbery டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மிரட்டி மதுபாட்டில்கள் கொள்ளைமேலும் செய்திகள்
போக்சோவில் வாலிபர் கைது
சொத்துக்காக மைத்துனர் கொடூர கொலை 2 ஆண்டுக்கு பின் கூலிப்படையுடன் அண்ணி கைது
வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி, தங்கள் வசம் கவரும் நோக்கில் பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை சேதப்படுத்திய தனியார் செல்போன் நிறுவன இன்ஜினியர் கைது: உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வலை
காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் பகுதியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 2 பேர் கைது
கூடுதல் நேரம் திறந்து விற்பனை மதுபான கடை மேலாளர் உட்பட 2 பேர் கைது
பாஜ எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் மோதல் ஒருவர் சுட்டுக் கொலை ஒருவர் அடித்து கொலை