நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
2021-01-17@ 20:42:52

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 2-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 2847 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 282 பேர் போட்டுக்கொண்டனர். அதிகபட்சமாக ஆந்திராவில் 308, தமிழகத்தில் 165, கர்நாடகாவில் 64 அமர்வுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
553 அமர்வுகளில், மொத்தம் 17,072 பயனாளிகளுக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் 2,24,301 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், இன்று 6 மாநிலங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி மையங்களை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா தடுப்பூசி திட்டம் போட தொடங்கிய நேற்று மற்றும் இன்றைய தினங்களில் 447 பேருக்கு பக்கவிளைவு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் மூன்று பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனாவுக்கு எதிராக ஒரே நாளில் அதிகபட்சமாக 2,07,229 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி எண்ணிக்கையாகும். முதல் நாளில் அதிகபட்சமாக போடப்பட்ட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை விட உயர்ந்தது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மார்ச் 7ம் தேதி பெண்களுடன் இணைந்து நடைபயணம்..!!
ஆன்லைன் பிரச்சாரத்தை தொடங்கியது காங்கிரஸ்...! விலைவாசி உயர்வை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும்: ராகுல் காந்தி அழைப்பு
காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பாஜக ஆட்சியில் மிகவும் குறைவு தான் : மத்திய அமைச்சர் பேச்சு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் - தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
ரமலான் அன்று சிபிஎஸ்இ தேர்வுகளை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் : சு. வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய கல்வி அமைச்சர் பதில்
கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு ஏப். வரை நீட்டிக்க திட்டம்!: ஒபேக் நாடுகள் முடிவால் பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ தாண்டும் அபாயம்..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!