இந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்ச; நன்றி கூறிய பிரதமர் மோடி
2021-01-17@ 12:32:20

டெல்லி : இந்தியாவில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசித் திட்டத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கைப் பிரதமர் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ மற்றும் ஐதராபாத்தின் பாரத் பயோடெக்-இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்த ‘கோவாக்சின்’ ஆகிய இரு தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி தந்தது.
இதில், கோவிஷீல்டு மருந்தை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகம் செய்கிறது. அந்த வகையில், ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்பான இரு கொரேனா தடுப்பூசிகளை போடும் பணியை பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.முதல் நாளில் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்ட நிலையில் 1.91 லட்சம் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
இது குறித்து இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில், 'உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா துவக்கி உள்ளமைக்கு வாழ்த்துகள்.இது மிகவும் முக்கியமான அடி. சீரழிக்கும் பெருந்தொற்றுக்கு முடிவு கட்டும் தருணம் தொடங்கிவிட்டது' எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் அந்த ட்வீட்டில், 'எங்களுடைய விஞ்ஞானிகள், முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பு இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.தடுப்பூசியை வேகமாகத் தயாரித்தது ஆரோக்கியமான நோயற்ற உலகை உருவாக்கும் உலக நாடுகளின் கூட்டுமுயற்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பணி' எனக் கூறினார்.
மேலும் செய்திகள்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை 2-வது முறையைாக ரத்து
பிரேசிலில் உருமாறிய கொரோனாவால் உயிரிழக்கும் பச்சிளம் குழந்தைகள்: கருவுருவதை தள்ளிப்போடுமாறு அந்நாட்டு அரசு அறிவுரை
கொரோனாவில் இருந்து முதல் நாடாக மீண்டது இஸ்ரேல் : முகக்கவசம் இல்லாமல் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் மக்கள்
ஒரே மாதத்தில் 4வது முறையாக எகிப்தில் ரயில் தடம் புரண்டு விபத்து : 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்!!
அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 14.18 கோடியாக உயர்வு..! உயிரிழப்பு எண்ணிக்கை 30.32 லட்சத்தை தாண்டியது
புத்தாண்டுக்காக ராணுவ அரசு முடிவு மியான்மரில் 23,000 கைதிகள் விடுதலை
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!