SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபத்தை தரும் செயலிகள்

2021-01-17@ 00:43:22

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அவசியமானவை. இன்றைய நவீன உலகம் வேகமாக இயங்கி வருகிறது. அதற்கேற்ப நாமும் வேகமாக இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இணையதளங்களின் வளர்ச்சிக்கு பின் எதையுமே வேகமாக செய்து விட முடிகிறது.  உள்ளங்கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். ஒரு சில நிமிடங்களில் நாம் நினைத்ததை சாதிக்க முடிகிறது. தியேட்டர்கள், வங்கிகள், மின்சார அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில், பணம் கட்ட மணிக்கணக்கில் காத்திருந்த காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது. அதற்கென உருவாக்கப்பட்ட செயலிகள் மூலம் ஆன்லைனில் மிக எளிதான முறையில் பணம் கட்டி விடுகிறோம். ஒரு வகையில் நமக்கான நேரத்தை ஸ்மார்ட் போன் செயலிகள் எளிதாக்குகின்றன. அதே நேரம் நமது தனிப்பட்ட அந்தரங்க தகவல்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருவதை நாம் கவனிக்க தவறி விட்டோம். ஒரு செயலியை நாம் தரவிறக்கம் செய்யும்போது, சில விஷயங்களை கவனித்திருப்போம். அந்த செயலி, ‘நமது ஸ்மார்ட்போன் கேலரி, தொடர்பு எண்களை பயன்படுத்திக் கொள்ளலாமா’ என கேட்கிறது. அதை தராவிட்டால் அந்த செயலிக்குள் நாம் செல்ல முடியாது. நாமும் ஓகே தந்து விடுகிறோம். அதன்பின்னர்தான் பிரச்னையே துவங்குகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப் செயலியில் கூட, நமது தகவல்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தது. இதன்மூலம் நாம் அனுப்பும் படங்கள், தகவல்களை அவர்கள் விற்கவோ, பயன்படுத்திக் கொள்ளவோ முடியும். ஏற்கனவே வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் நமது தகவல்களை சேமிப்பதற்கான சர்வர்கள் உள்ளன. இதன்மூலம் நமது படங்கள், தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. இந்த செயலிகள் மட்டுமல்ல... பெரும்பாலான செயலிகள் மிகவும் எளிதாக நம் ஸ்மார்ட்போனுக்குள் சென்று உளவு பார்க்க முடியும். அப்படி என்றால் எதுதான் பாதுகாப்பானது என்கிறீர்களா? எந்த ஒரு செயலியும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்றுதான் கூற முடியும். இதுஒருபுறமிருக்க, கொரோனா ஊரடங்கில் பலர் வேலை வாய்ப்பை இழந்ததை, பயன்படுத்தி பெரும்பாலான கடன் தரும் செயலிகள் களமிறங்கி விட்டன. இவர்களின் முக்கிய வேலையே முக்கிய அரசு, தனியார் வங்கிகளை விட குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் என்பதுதான். இதை நம்பி பலர் தங்களது தனிப்பட்ட தகவல்களை தந்து விடுகின்றனர். போன், எஸ்.எம்.எஸ் மூலமாக தொடர்ந்து நம்மை தொந்தரவு செய்து சம்மதம் பெற்று கடனை தந்து விடுவார்கள். சிலர் முன்பணம் கட்டச்சொல்லியும் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

பணம் கட்டியதும் யாரை தொடர்பு கொள்வது? பணம் கிடைக்குமா என்பதை உறுதியாக கூற முடியாது. லட்சக்கணக்கானோர் இதில் சிக்கிக் கொண்டுள்ளனர். பலர் வட்டி கட்ட முடியாமல் தற்கொலையும் செய்துள்ளனர். பொதுமக்களின் புகாரை தொடர்ந்து, சுமார் 30 செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், மேலும் பல செயலிகள் அங்கீகாரமற்ற முறையில் செயல்பட்டு அதிக வட்டி கேட்பதான புகார்கள் அதிகரிக்கின்றன. ஏற்கனவே டிக்டாக் செயலியால் பல குடும்பங்கள் பாதித்தன. எனவே, மத்திய, மாநில அரசுகள் அதிரடியாக களமிறங்கி, செயலிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். அரசு அனுமதியோடும், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய செயலிகளை மட்டுமே தரவிறக்கம் செய்வற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nasaaa_mmm

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

 • 08-03-2021

  08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்