ஆரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
2021-01-17@ 00:30:39

பொன்னேரி: பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கூடுவது வழக்கம். ஆனால் பழவேற்காட்டில் படகுசவாரி, சுற்றுலா மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. காவல்துறையினர் ஆண்டார் மடம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை மணலியிலிருந்து பாலாஜி (32) கார்பெண்டர், இவரது நண்பர்கள் சரவணன், கார்த்திக், குணசேகர் அனைவரும் பழவேற்காடு பகுதிக்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர். மீண்டும் திரும்பிச் செல்லும்போது வழியில் ஆண்டார்மடம் அருகே ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர். வடகிழக்கு பருவமழை பெருவெள்ளத்தால் ஆண்டார்மடம் அருகே ஆற்றின் கரை உடைந்து சாலை துண்டிக்கப்பட்டு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கும்போது பள்ளத்தில் 4 பேரும் சிக்கிக் கொண்டனர்.
அங்கிருந்து தண்ணீரில் மூழ்கியபடி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். இதில் பாலாஜியை தவிர 3 பேரை காப்பாற்றினர். பாலாஜி கிடைக்கவில்லை.இதுகுறித்து திருப்பாலைவனம் மற்றும் காட்டூர் காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார், சம்பவ இடத்திற்கு நீச்சல் தெரிந்தவர்களைக் கொண்டு எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஆற்றில் மூழ்கிய பாலாஜியை கண்டுபிடித்து பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துபோது பாலாஜி இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
* போலீசார் அழைத்தும் கண்டுகொள்ளாத தீயணைப்புத்துறை
சம்பவம் குறித்து பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு போலீசாரே பலமுறை தகவல் கொடுத்தும் அவர்கள் வரவில்லை. எனவே போலீசார் அப்பகுதியில் வசிக்கும் நீச்சல் தெரிந்தவர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். இதுபோன்ற ஆபத்தான நேரத்தில் தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
வீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தபோது தாய், பெண் சிசு பரிதாப பலி
152 அடி உயரம்... 8 மதகுகள்... ரூ.1000 கோடி செலவில் முல்லைப்பெரியாறில் புதிய அணை திட்ட அறிக்கை பணிகள் தீவிரம்
உரம் விலையை குறைக்க கோரி போராட்ட அறிவிப்பு வெளியிட்ட அய்யாக்கண்ணுக்கு வீட்டு சிறை: அரை நிர்வாணத்தில் விவசாயிகள் மறியல்
போலி சான்றிதழில் 10 ஆண்டுகள் பணி அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை மாற்றி கொடுத்த விபரீதம்: உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை
அனுமதியற்ற சிலைகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!