SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் ஜெயிக்காவிட்டால் மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என்ற இலை கட்சியின் எச்சரிக்கை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-01-17@ 00:20:16

‘‘என் நிலைமையே ஆட்டம் காணுது... இதுல விசுவாசிகளின் ஆட்டத்தை தாங்க முடியலையே என்று ெடன்ஷனில் இருக்கும் பூட்டு மாவட்டத்தின் முன்னாள் அதிகார மையம் புலம்புகிறாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்டத்தின் ‘நதியூர்’ தொகுதியில் இலைக்கட்சிக்குள் உள்குத்து வேலைகள்’ உச்சகட்டத்தில் இருக்கிறதாம். ஏற்கனவே இந்த தொகுதியில் எதிர்க்கட்சி பலமாக இருக்கும் சூழலில், முன்னாள் அமைச்சரின் விசுவாசியான தாடி வைத்த இயக்குநரின் இன்சியலை கொண்டவர், ‘நான்தான் வேட்பாளர்’ என அத்தனை பேரிடமும் தம்பட்டம் அடிக்கிறாராம்... இவரைப் போலவே மாஜியின் முக்கிய ஆதரவாளர்கள் பலர், தங்களுக்குத்தான் சீட் என கூறி இப்போதே பிரசாரம் செய்யாத குறையாக சொல்லி வர்றாங்க.  இதனால் பூட்டு மாவட்டத்தின் முன்னாள் அதிகார மையம் மண்டை காய்ந்து வருகிறதாம். ஏற்கனவே தானே நின்று தோற்ற தொகுதிக்கு இத்தனை பேரு மல்லுக்கட்டுறாங்களே என்ற குழப்பத்திலும் உள்ளாராம். யாருக்கு சீட் கொடுத்தாலும், சீட் கிடைக்காதவர்கள் உள்குத்து வேலைகளில் இறங்க ரெடியாக இருக்கிறார்களாம். ஏற்கனவே பூட்டு மாவட்டத்தில் சர்ச்சை பேச்சு புகழ் அமைச்சருடன், முன்னாள் அதிகார மையம் சில ஆண்டுகளாகவே மல்லுக்கட்டி வருகிறார். கடந்த முறை வம்பாக தோற்கும் தொகுதியை தலைமை வழங்கியதால் அதிருப்தியில் இருந்த பழைய அதிகார மையம், தற்போது எந்த தொகுதியில் சீட் கொடுக்கப் போகிறார்களோ அல்லது கொடுக்க மாட்டார்களோ என்று தவிக்கிறாராம்... இதுல தனது ஆதரவாளர்கள் வேற இப்படி அடிச்சுக்கிறாங்களே என பார்ப்பவர்களிடம் சொல்லி வருகிறாராம்...’’ எ்ன்றார் விக்கியானந்தா.
‘‘கொரோனா காலத்துல சத்தமில்லாமல் சம்பாதித்த ஆர்டிஓ, மருத்துவம், மாசுகட்டுப்பாட்டு வாரியம், மின்துறை, பத்திரப் பதிவு துறைகள்னு பலரும் நினைச்சுட்டு இருக்காங்க.. ஆனால் கல்வி துறையில தான் கண்ணும் காதும் வெச்ச மாதிரி லட்சக்கணக்கில் கல்லா கட்டினாங்களாமே, உண்மையா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக கல்வித்துறையில், கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஆசிரியர் இடமாறுதல் தொடர்பான கவுன்சலிங் நடக்கல.. ஆனாலும், ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் ஆர்டரோடு ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து இன்னொரு கல்வி மாவட்டத்துக்கு சத்தமே இல்லாமல் போய் ஜாயின்ட் பண்றாங்களாம். வேறு ஒன்றியங்களில் இருந்தும் கோவை மாவட்டத்துக்கு இதுவரை 25 ஆசிரியர்கள் இடமாறுதல் கேட்டு வந்துள்ளனர். மூன்று முதல் ஐந்து லகரம் வரை, இவர்கள் சம்திங் ெகாடுத்து, இடமாறுதல் உத்தரவு வாங்கியிருக்காங்க... தென்மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து வந்திருக்காங்க.. இவர்களுக்கான போஸ்டிங் உத்தரவு சென்னை கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அதிரடியாக வருவதால், கோவை மாவட்ட கல்வித்துறை உயரதிகாரிகள் கல கலத்துப்போய் இருக்கிறார்கள். நமக்கு தெரியாம, மேலிடத்தில் இருந்து அதிரடியாக உத்தரவு வருகிறதே.. என பிரம்மித்து போய் பார்க்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் மேலும் 15 பேருக்கு டிரான்ஸ்பர் உத்தரவு வரும் என பேசிக்கொள்கிறார்கள். ஆளும்கட்சி முக்கிய புள்ளிகள் தயவுடன், கொடுப்பதை கொடுத்து, ஆசிரியர்கள் தங்கள் இஷ்டப்பட்ட இடத்துக்கு இடம் மாறிக் கொள்கிறார்கள். அதிரடியாக உள்ளே வந்து இறங்குவதை தடுக்க, மாவட்ட அளவிலான அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியல... இதனால், கல்வித்துறை வட்டாரம் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை காணப்படுகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கேட்டீங்கனு புதுசா மாவட்டங்களை உருவாக்கி, அதுல மாவட்ட செயலாளர்களாகவும் ேபாட்டாச்சு... இனி ஜெயிக்கல... மாவட்ட செயலாளர் பதவி கிடையாது... சம்மதம் இல்லையென்றால் இப்போதே பதவி விலகிடுனு இலை தலைமை சொல்லி இருக்காமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2500 பணம் கொடுத்ததால் மக்கள் மனம் மாறிவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். அது அரசு பணம் தான்னு மக்களே பரவலாக பேசிக்கிறாங்க. அதனால பொங்கல் தொகுப்பு பலனளிக்காது என்று பேசிக்கிறாங்க. இந்த அறிக்கையை உளவுத்துறையிடம் இருந்து பெற்ற இலை தரப்பு மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாம். அதில், சட்டமன்ற தொகுதிகளில் கட்டாயம் ஜெயிக்க வேண்டும் என்றும், தோல்வியடையும் தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளதாம். இதனால், புதிதாக மாவட்ட செயலாளர்களாக பொறுப்பேற்றவர்கள் இடிந்து போயுள்ளனர். இப்பதான் சம்பாதிக்க ஆரம்பிச்சோம், அதுக்குள்ள இப்படி உத்தரவு போட்டா என்ன செய்றது, பதவி பறிபோனா என்ன பண்றது என்று மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகளிடம் போன் போட்டு புலம்பி வருகின்றனர். கட்சி மேலிடத்தின் கறார் உத்தரவால் அரசின் சாதனைகள் என்று எதைக் கூறி ஓட்டு கேட்பது என்று தீவிர டிஸ்கஷனில் மூழ்கியுள்ளார்களாம். அப்புறம் தேர்தலில் வேட்பாளரை ஜெயிக்க வைக்க முடியாதுனு நினைக்கிறவங்க... இப்போதே மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விலகி...வேறு ஒருவருக்கு வழியை விடுங்கனு சொல்லி இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி என்றாலே இலை கட்சிக்கு பிரச்னை தான் போலிருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டி விசியோட பதவிக்காலம், சமீபத்துல முடிஞ்சது. பாராட்டு விழா நடத்தி, பொறுப்பு குழு நியமிச்சு எல்லோரும் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம், திடீருன்னு விசிக்கு எக்ஸ்டென்சன் கொடுத்துட்டாங்க. அதுவும் புது ஆபிசர் அல்லது மறு உத்தரவு வர்ற வரைக்கும் இந்த எக்ஸ்டென்சன்னு உத்தரவு வந்ததால, யுனிவர்சிட்டி வாத்தியாருங்க கடும் அதிருப்திக்கு ஆளாகிட்டாங்க. அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும், இந்த எக்ஸ்டென்சனுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. அதேசமயம் கிடச்ச பொறுப்ப விட்டுற கூடாது என்பதிலும் உறுதியா இருக்காராம். இதனிடையே, யுனிவர்சிட்டி நிர்வாகம் சார்பா சமத்துவ பொங்கல் விழா சிறப்பா நடத்துனாங்க. கடந்த 3 வருசமா தவறாம கலந்துக்கிட்ட விசி, இந்த வருசம் திடீர்னு பங்சனுக்கு வராம புறக்கணிச்சுட்டாராம். கிடைச்ச வாய்ப்ப தக்க வச்சுக்க பல இடங்களுக்கு போயிட்டு வர்றதால, பொங்கல் விழா எல்லாம் பெருசில்லனு முடிவு பண்ணிட்டாரோனு யுனிவர்சிட்டி வாத்தியாருங்க பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-02-2021

  26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • modipuudddhh

  புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!

 • maaaaaaaaa

  பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!

 • icvator25

  3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

 • sheep25

  ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்