உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இந்தியாவில் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!!
2021-01-16@ 10:42:22

டெல்லி : உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் 5க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த 2 தடுப்பூசிகளும் புனேவில் உள்ள ஆய்வகங்களில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக நாடு முழுவதும் 3,006 மையங்களில் சுமார் 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி படிப்படியாக போடப்பட்டுள்ளது.
தொடக்க நாளில், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும். முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ஐசிடிஎஸ்) ஊழியர்கள் உட்பட அரசு மற்றும் தனியார் துறை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இந்த தடுப்பூசி திட்டம், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் உருவாக்கிய ‘கோ-வின்’ என்ற ஆன்லைன் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தும். கோவி-19 தொற்று, தடுப்பூசி அறிமுகம் மற்றும் கோ-வின் மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க 24 மணி நேர உதவி மையம் - 1075 ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நிபந்தனைகள்
* 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்படும்.
* கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி கொடுக்கக்கூடாது.
* 14 நாட்கள் இடைவெளி அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களை பிரிக்க வேண்டும்.
* முதல் ேடாஸில் எந்த தடுப்பூசி வழங்கப்பட்டதோ, அதே மருந்தைதான் இரண்டாவது டோஸாகவும் வழங்க வேண்டும். தடுப்பூசியை மாற்றி போடக்கூடாது.
* ரத்தப்போக்கு அல்லது ரத்தம் உறைதல் கோளாறு உள்ளவர்களுக்கு தடுப்பூசியை எச்சரிக்கையுடன் வழங்க வேண்டும்.
* நோய்த்தொற்றின் (செரோ-பாசிட்டிவ்) அல்லது ஆர்டி-பி.சி.ஆர் பாசிடிவ் கொண்டவர்கள், நாட்பட்ட நோய்கள் (இருதய, நரம்பியல், நுரையீரல், வளர்சிதை மாற்றம், சிறுநீரக பாதிப்பு), நோயெதிர்ப்பு பாதுகாப்பு, எச்.ஐ.வி பாதிப்பு கொண்டவர்களை அதிக கவனத்தில் கொண்டு தடுப்பூசி கொடுக்கலாம்.
* கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு என்று பிரத்யேகமான தனித்தனி வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
மேலும் செய்திகள்
FasTag முறையால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும்!: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!!
சென்னை தி.நகரில் இல்லத்தில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும்!: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
வீரியம் குறையாத கொரோனா!: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேர் பாதிப்பு..மேலும் 91 பேர் உயிரிழப்பு..!!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்..? டெல்லி எல்லையில் 100-வது நாளை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்