கோவின் செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு!!
2021-01-16@ 09:15:14

டெல்லி: கோவின் செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இன்று இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் முதற்கட்டமாக 30 கோடிக்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்ற கோவின் என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோவின் செயலி மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.
கோவி-19 தொற்று, தடுப்பூசி அறிமுகம் மற்றும் கோ-வின் மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க 24 மணி நேர உதவி மையம் - 1075 ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமே தடுப்பூசி பெற விரும்புவோர் தங்களின் விவரத்தை பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்க முடியும். இந்த செயலி மூலம் தடுப்பூசி தொடர்பான பயனாளிகளின் பதிவுகள் பராமரிக்கப்படும். இந்த கோவின் மொபைல் செயலியையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் Google Play Store அல்லது Apps Store லிருந்து கோவின் செயலியை சாதாரண மக்கள் பதிவிறக்கம் செய்து தங்களுடைய விவரத்தை பதிவு செய்யலாம். விரைவில் இந்தியாவில் உள்ளவர்கள் இந்த செயலியை பதிவிற்க்கம் செய்வதற்கான இணைப்பு வழங்கப்படும். கோவிட் 19 தடுப்பூசி பிரச்சாரத்தை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கான கிளௌட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது கோவின். இதன் மூலம் தடுப்பூசி பயன்படுத்துபவர்களை நேரலையாக கண்காணிக்க முடியும். தடுப்பூசிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நேரத்தை குறிக்க முடியும். பயனாளிகள் தமது விவரத்தை செயலியில் பதிவேற்றியவுடன் தடுப்பூசி பெறுவோரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வழங்கப்படும். இது தவிர தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து மக்களுக்கு கியூஆர் கோடு முறையில் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் செய்திகள்
குருவாயூர் கோயில் திருவிழா ஆறாட்டு நிகழ்ச்சியுடன் நிறைவு
லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு
கொரோனா பரவல் மீண்டும் உச்சம்; ஒரே நாளில் நாடு முழுவதும் 18,711 பேருக்கு தொற்று உறுதி: மக்கள் அச்சம்..!
நாளை சர்வதேச பெண்கள் தினம்: எதைப்பற்றியெல்லாம் பெண்கள் ட்வீட்டரில் பதிவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்
தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் தடுப்பூசி சான்றிதழில் இருந்து மோடி படத்தை நீக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
பெற்றோரை பிரிய மனமின்றி அழுத மணப்பெண் பலி