மத்திய அரசு விவசாயிகள் 9ம் கட்ட பேச்சும் தோல்வி: வரும் 19ல் மீண்டும் ஆலோசிக்க முடிவு
2021-01-16@ 05:08:27

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் 51 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசு, விவசாயிகளுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காண முடியவில்லை. இப்பிரச்னையை தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் உள்ளவர்கள் வேளாண் சட்டத்தை ஆதரித்தவர்கள் என்பதால், குழு முன்பாக ஆஜராக மறுத்த விவசாயிகள், மத்திய அரசுடனான பேச்சவார்த்தை தொடரும் என தெரிவித்தனர். இதன்படி, 9ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும், 40 விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர். சுமார் 5 மணி நேரம் நடந்த இப்பேச்சவார்த்தையில், 3 சட்டங்களையும் ரத்து செய்தே தீர வேண்டுமென விவசாயிகள் உறுதியுடன் கூறினர். இதனால், எந்த முன்னேற்றமும் இல்லாமல் தோல்வி அடைந்தது. அடுத்ததாக, வரும் 19ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது!: ராகுல்காந்தி
மேற்கு வங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,989 பேர் கொரோனாவால் பாதிப்பு: 98 பேர் உயிரிழப்பு
நீட் 2021: காஷ்மீரில் இந்திய ராணுவம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் 'சூப்பர் 30' திட்டம் தொடக்கம்
ஏசி 3 அடுக்கு எகானமி ரயில் பெட்டி தயாரிப்பு தொடக்கம்: இம்மாத இறுதியில் தயாராகும்
கோ-வின் செயலியில் மூத்த குடிமக்கள் ஆர்வம்: கொரோனா தடுப்பூசிக்காக 50 லட்சம் பேர் முன்பதிவு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்