SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைக் போலீஸ் அதிகாரியை கண்டு போலீசாரே அலறும் நிஜக்கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2021-01-16@ 05:01:07

‘‘சிறை அதிகாரிக்கு ஜால்ரா அடிக்கும் சில்லறை ஊழியர்களின் அட்ராசிட்டியை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘எந்த அதிகாரி டிரான்ஸ்பரில் வந்தாலும் அவரை காக்க பிடிக்க ஒரு கூட்டம் எப்போதுமே தமிழகத்தில் உண்டு. அந்த வகையில், வெயிலூர் மாவட்டத்தில் பெயர்போன மத்திய சிறைக்கு புதிய கண்காணிப்பாளராக துள்ளாத மனம் துள்ளும் படத்தின் கதாநாயகியின் பெயர் கொண்டவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்னும் பதவியேற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மத்திய சிறையில் பணியாற்றும் முதல்நிலை காவலரான பட்டான ராஜன், மல் என்று முடியும் நான்கு எழுத்து பெயர் காவலருடன் சேர்ந்து, புதிய கண்காணிப்பாளர் எங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான். நாங்கள் என்ன சொன்னாலும் அவர் கேட்பார் எனக்கூறி காவலர்களிடம் அடாவடி செய்து வருகின்றனராம்.
அதோடு மட்டுமின்றி, உதவி சிறை அலுவலர் குடியிருப்பில் தங்கிருந்த 2 பெண் உதவி சிறை அலுவலர்களை வீட்டை காலி செய்து, அந்த வீட்டில்தான் புதிய கண்காணிப்பாளரை தங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதுடன், புதிய கண்காணிப்பாளருக்கு நாங்கள்தான் உதவியாளர் என சொல்லி வருகிறார்களாம். புதிய அதிகாரி பொறுப்பு ஏற்கும் முன்பே இந்த ஆட்டம் போடும் இவர்கள், அந்த அதிகாரி வந்த பிறகு இவர்களின் அட்ராசிட்டி எப்படி இருக்குமோ என்று சிறை காவலர்கள் பரபரப்பாக பேசி வர்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாவட்டம் பெயர்தான் விருது... ஆனால் இந்த மாவட்டத்தில்தான் எல்லா பணிகளும் ஆமை வேகத்தில் நடக்குதாம்... கட்சியை பார்த்து நிதி ஒதுக்குறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘விருது என்ற பெயர் கொண்ட மாவட்டத்தில் ‘மன்னர்’ பெயர் கொண்ட பாளையம் ஊரில் உள்ளாட்சி அதிகாரிகளின் செயல்பாடுகள் மர்மமாகவே உள்ளதாம். இங்கு பாதாளச் சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் நடந்தபோதும், என்னென்ன வேலைகள் நடத்தப்படுகிறது. திட்ட மதிப்பீடு உள்ளிட்ட எந்த தகவலையும் பரம ரகசியமாக அதிகாரிகள் வைத்துக் கொண்டு வாய் திறக்க மறுக்கின்றனராம்... இப்பணிகளில் வெளியூர்க்காரர்களை நியமித்து வேலை நடக்கிறதாம். யாராவது கேட்டால், ‘செக் போட்டுக் கொடுங்க’ என்று ஆளும் தரப்பின் ‘உயர் மட்டத்திலிருந்து’ வரும் உத்தரவைத்தான் நிறைவேற்ற முடியும். உங்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாதென அதிகாரிகள் மக்களிடம் ஆத்திரப்படுகிறார்களாம்.
மேலும், ரயில்வே மேம்பாலப் பணிகளை சில மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனராம். தமிழக அரசு அப்பகுதியின் இடங்களைக் கையகப்படுத்துவதில் தாமதம் காட்டுவதற்கு மற்றொரு காரணமும் பேசப்படுகிறது. அதாவது, தொகுதி எம்எல்ஏ வேறு கட்சி என்பதால், இந்த பணியின் பெருமை அவருக்கு போய்ச் சேர்ந்து விடும் என்ற அச்சத்திலும், ஆளுங்கட்சியினர் அக்கறை காட்டவில்லையாம். மொத்தத்தில் இப்பகுதியில் முறையாகத் திட்டங்களை நிறைவேற்றாமல், ஆளும் தரப்பினருக்கும், அதிகாரிகள் சிலருக்கும் வருவாய் வழங்கும் வகையிலேயே பணிகள் நடக்கின்றன...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பெரம்பூர், ஆர்கேந கர் ெதாகுதியில் போட்டியிட இலை கட்சியில் முட்டல், மோதல் எல்லாம் நடந்து வருதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் இருந்த பகுதி செயலாளர் பொறுப்பு பிரிக்கப்பட்டு  தற்போது மூன்று பகுதி செயலாளர்களை  நியமித்து விட்டார்கள். இதில் இலையின் மாவட்ட செயலாளருக்கு எதிராக செயல்படும் மூன்று பேர் தற்போது பகுதி செயலாளர்களாக இருக்காங்களாம். மாவட்ட செயலாளராக உள்ளவர் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். எனவே பெரம்பூர் தொகுதியில் போட்டியிட பகுதி செயலாளர்கள் 2 பேர் முட்டி மோதி வர்றாங்களாம். இதில் ஒருவர் வடசென்னையை சேர்ந்த இலையின் கொள்கைப் பரப்பு செயலாளர் போல வலம் வரும் அமைச்சரின் ஆதரவாளர். பாஸ் என்பவருக்கு ஏரியாவில் மக்கள் செல்வாக்கு இருக்குனு பேசிக்கிறாங்க. இந்நிலையில் மாவட்ட செயலாளருக்கு சீட் கிடைப்பதை தடுக்க... அமைச்சரின் சப்போர்ட்டில் வலம் வரும் பகுதியை செயலாளரை பெரம்பூர்  தொகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்து வர்றாராம். இப்போது இடியாப்ப சிக்கலாட்டம், புது வரவாக வந்துள்ள பாடகர் பெயரைக் கொண்ட ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என பரவலாக பேசப்படுகிறது. இதனால் பெரம்பூர் தொகுதியில்  பகுதி செயலாளர்கள்  போடும் கணக்கு தப்புமா அல்லது மாவட்ட செயலாளர் கணக்கு எடுபடுமா என்ற குழப்பம் அதிகரித்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி மாவட்டத்துல காக்கிகளின் ரெகமண்டேஷன் தொல்லை தாங்க முடியலையாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி  மாநகர காக்கி அதிகாரிகள் 2 பேர் வாக்கி-டாக்கியில் முதல்வர் இருக்கும்  போது காரசாரமாக மோதிக்கொண்ட விவகாரம் பூதாகரமா வெடிச்சிருக்காம். இதில்  ஒருவர் மீதுதான் தவறு இருந்தாலும், 2 துணை அதிகாரிகளுக்கும் சிஓபி மெமோ  கொடுத்திட்டாராம். தொடர்ந்து புகாருக்கு ஆளான அதிகாரி மீது நடவடிக்கை  எடுக்க மேலிடம் உத்தரவிட்டதாம். ஆனால், தமிழக விவிஐபியின் பவர்புல் உறவினரை  சந்தித்து கண்ணீர் மல்க மைக் அதிகாரி முறையிட்டாராம். இதனால நடவடிக்கையை  நிறுத்தி வச்சிருக்கிறதா, மாநகர காக்கி வட்டாரத்தில் பரவலா  பேசிக்கிட்டிருக்காங்க. என் மீது யாராலும் கை வைக்க முடியாதுன்னு மைக் காக்கி அதிகாரி சவால்  விட்டிருக்காராம். மாங்கனி மாநகரில் தன்னை மேலும் நிலை  நிறுத்தும் வகையில் செயல்படும் அந்த அதிகாரி, காலையில் போலீஸ் அதிகாரி மைக்கை  எடுத்தால் இரவு வரை கீழே வைப்பதில்லையாம். இதனால அனைத்து அதிகாரிகளும்  மைக்கையே வாட்ச் பண்ணிக்கிட்டிருக்காங்களாம். இதுதான் மாநகர காக்கிகள்  மத்தியில் ஹாட் டாப்பிக்கா ஓடிக்கிட்டிருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.        

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-03-2021

  02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-modi1

  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

 • myan-firing1

  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

 • itaklyyychha

  இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

 • 01-03-2021

  01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்