பொங்கல் பண்டிகைக்கு பஸ்கள் இயக்கம் போக்குவரத்து கழகத்துக்கு 5.46 கோடி வருவாய்: 5.6 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
2021-01-16@ 00:29:48

சென்னை: கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளில் 100 சதவீதம் பயணிகள் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, பொங்கலை முன்னிட்டு கடந்த 11, 12, 13 மற்றும் 14 தேதிகளில் காலை 6 மணி வரையில் சென்னையிலிருந்து 10,276 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 712 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். தற்ேபாது வரை 1,22,600 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதில், சென்னையிலிருந்து 45,275 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து 77,325 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், போக்குவரத்துக் கழகத்திற்கு ₹5 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கும், பிற பகுதிகளிலிருந்து மற்ற ஊர்களுக்கும் சென்றுள்ள பயணிகள் திரும்பி வர ஏதுவாக வரும் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 9,543 பேருந்துகளும், சென்னையை தவிர்த்து மற்ற பிற இடங்களுக்கு 5,727 பேருந்துகள் என மொத்தம் 15,270 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
பெரியபாளையம் ஆரணி ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 562 பேர் பாதிப்பு: 560 பேர் குணம்; 04 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
பழவந்தாங்கலில் பரபரப்பு: மருத்துவ கழிவுகளை கொட்டிய குப்பை லாரிகள் சிறைபிடிப்பு
மார்ச் 8 முதல் 10ம் தேதி வரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சிறப்பு டிஜிபி, செங்கை எஸ்.பி.யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: தமிழக டிஜிபிக்கு பாலகிருஷ்ணன் கடிதம்
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!