SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா கொரோனா நிலவரம்: 24 மணி நேரத்தில் 16,946 பேருக்கு தொற்று; 17,652 பேர் டிஸ்சார்ஜ், 198 பேர் உயிரிழப்பு

2021-01-14@ 10:01:36

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.51 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில், அதே போல், பாதிப்பு 1.05 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,946 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,05,12,093 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 198 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,51,727 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 17,652 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,01,46,763 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,13,603 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 96.52% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.03% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 7,43,191 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 18,42,32,305 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2021

    21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்