அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி விரர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் ரூ. 1லட்சம் பரிசு அறிவிப்பு
2021-01-14@ 09:34:41

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் ரூ. 1லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில்முதல் சுற்று முடிந்த நிலையில் 2-வது சுற்று தொடங்கியுள்ளது. முதல் சுற்று முடிவில் 68 காளைகள் வாடிவாசலில் சீறிபாய்ந்துள்ளன. இரண்டாம் சுற்று வீரர்களுக்கு மஞ்சள் நிற உடை வழங்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் 4 பேர் காயம் அடைந்துள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 430 மாடுபிடி வீரர்களும், 788 காளைகளும் களம் காண இருக்கின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் கோயில் காளைகள் வாடிவாசலில் சீறிபாய்ந்தன.
மேலும் செய்திகள்
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஜி.எஸ்.டி., பெருமுதலாளிகளால் நசிவுப்பாதைக்கு செல்லும் ஜவுளித்துறை: கடும் அதிருப்தியில் தொழில் முனைவோர்
அச்சத்துடன் பணிக்கு செல்லும் வேளாண் துறை ஊழியர்கள் சேரன்மகாதேவியில் பராமரிப்பின்றி பாழான கோயில் தெப்பக்குளம்: மீண்டும் கழிப்பிடமாக மாறிய வழிப்பாதை
4 கிமீ தூரம் நடந்து செல்லும் பக்தர்கள் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் செல்லும் மலைப்பாதை சீரமைக்கப்படுமா: கலெக்டர் ஆய்வு செய்தும் பயனில்லை
இங்கே கிடையாது, அடுத்த மாவட்டம் போங்க...! மின்கட்டணம் செலுத்த எல்லை தாண்டும் மக்கள்: உக்கிரன்கோட்டையில் தொடரும் அவலம்
காளையார்கோவில் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணிகள் தவிப்பு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்