தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலாவதாக அவிழ்த்து விடப்பட்ட கோயில் காளை
2021-01-14@ 08:30:15

மதுரை: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 430 மாடுபிடி வீரர்களும், 788 காளைகளும் களம் காண இருக்கின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் கோயில் காளைகள் வாடிவாசலில் சீறிபாய்ந்தன.
ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றில் ஆரஞ்சு நிற உடை அணிந்து வீரர்கள் களத்தில் உள்ளனர். அவனியாபுரம் பாலகுருநாதன் கோயில் காளை உள்ளிட்ட 4 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பொங்கல் விழாவை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிகட்டுப் போட்டி தொடங்கியது.
மேலும் செய்திகள்
காவு வாங்க காத்திருக்கும் மருத்துவமனை கட்டிடம்: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
கன்னட அமைப்பினர் சேதப்படுத்திய பெயர் பலகைகள் தமிழக எல்லைக்குள் நடும் பணி தீவிரம்
பாடுபட்டும் பலன் இல்லாமல் போனது வயலில் முளைத்த நெல்மணிகளை அறுவடை செய்த விவசாயிகள்: அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை
மரப்பாலம் அருகே அந்தரத்தில் தொங்கும் சாலை: போக்குவரத்து பாதிப்பு
வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க சூரிய சக்தி மின்வேலி அமைக்க விண்ணப்பிக்கலாம்
பந்தலூர் அருகே தேயிலைத்தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்