மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் ஆவடி, கோணாம்பேடு கிராமத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
2021-01-14@ 01:53:59

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் ஆவடி மாநகரத்தில் இன்று மாலை நடைபெறும், மாபெரும் சமத்துவ பொங்கல் விழாவில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், ஆவடி மாநகரம், கோணாம்பேடு கிராமத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா, இன்று மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சமத்துவ பொங்கலிட்டு பேசுகிறார். முன்னதாக, பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி வரவேற்கிறார்.
மேலும், ஆவடி கிழக்கு நகர பொறுப்பாளர் பேபி வி.சேகர், ஆவடி தெற்கு நகர பொறுப்பாளர் ஜி.ராஜேந்திரன், ஆவடி வடக்கு நகர பொறுப்பாளர் ஜி.நாராயணபிரசாத் ஆவடி மேற்கு நகர பொறுப்பாளர் பொன்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில், மாநில மாணவரணி இணை அமைப்பாளர் பூவை சி.ஜெரால்டு, மாவட்ட துணை செயலாளர்கள் நடுகுத்தகை ஜெ.ரமேஷ், காயத்ரி தரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ராஜி, ஜி.ஆர்.திருமலை, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் என்.இ.கே.மூர்த்தி, தி.வை.ரவி, பூவை ஜெயக்குமார், டி.தேசிங்கு, புஜ்ஜி ராமகிருஷ்ணன், காக்களூர் ஜெயசீலன், பூவை ரவிக்குமார், கோடுவள்ளி முரளி, வே.முனுசாமி மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வார்டு, வட்ட, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்கின்றனர்.
Tags:
District Secretary Samu Nasser Leadership Avadi Konambedu Village Equality Pongal Festival DMK Chairman MK Stalin மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமை ஆவடி கோணாம்பேடு கிராமம் சமத்துவ பொங்கல் விழா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஐ.நா மனித உரிமை ஆணைய 46வது கூட்டம் இலங்கை தமிழர் கோரிக்கை நிறைவேறுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
அதிமுக.வை மீட்பதே தாரக மந்திரம்: டிடிவி தினகரன் உறுதி
31ம் தேதிக்குள் உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால் பொதுக்குழுவில் கூட்டணி முடிவு: ராமதாஸ் அதிரடி
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் கைது: அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம்
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவருக்கு நினைவிடம் இறப்பு மர்மம் குறித்து விசாரணை கேட்ட ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!