ரிப்பன் மாளிகையில் பொங்கல் விழா
2021-01-14@ 01:22:33

சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் அனுமதியுடன் துணை ஆணையர் மேகநாத ரெட்டி அறிவுறுத்தலின்படி வருவாய் துறை சார்பில், பொங்கல் விழா மற்றும் உணவுத்திருவிழா நேற்று நடந்தது.
இதில் வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு, உதவி வருவாய் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை மாநகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர். மேலும், ஊழியர்களுக்கான கோலப்போட்டி நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். சிறப்பான கோலம் வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன்பிறகு மாலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அனைத்து துறை ஊழியர்களும் இணைந்து பொங்கலிட்டு, ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதையடுத்து உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சியில் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகள் கலந்துகொண்டு தாங்கள் சமைத்த உணவுகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.
மேலும் செய்திகள்
மாநகர செய்தி துளிகள்...
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா
ஜெயலலிதா நினைவிட நிகழ்ச்சியில் பரிதாபம் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாரடைப்பால் மரணம்
12 நாட்களில் 82,039 கொரோனா தடுப்பூசி
எதிர்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஜெயலலிதாவுக்கு அழகான நினைவிடம் அமைப்பு: எம்ஜிஆர் நினைவிடமும் புதுப்பிக்கப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மாயமான சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!