SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற கொடூரம் 11 பெண்களை திருமணம் செய்த காதல் மன்னன்: பேஸ்புக் காதலால் விபரீதம்; ‘‘இதெல்லாம் எனக்கு சகஜம்பா’’ காமக்கொடூரன் வாக்குமூலம்

2021-01-14@ 00:34:39

சென்னை: மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற காமக் கொடூரன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மலர் (20, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு சென்னை பாரதி நகர் ஏபிசி காலனி பகுதியை சேர்ந்த லவ்லி கணேஷ் (எ) கணேஷ் (22) என்பவருடன் 2017ம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இது காதலாக மாறியது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, கடந்த டிசம்பர் 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர், திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையில், மலரை காணாததால் பெற்றோர் உறவினர் வீட்டில் தேடினர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் வில்லிவாக்கம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிந்து தேடினர். இதை அறிந்த அவர்கள், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அப்போது, ‘கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வசிக்கிறேன். அவருடன்தான் வாழப்போகிறேன். இதில் யாரும் தலையிட வேண்டாம்’ என்று மலர் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் வில்லிவாக்கம் காவல் நிலையம் அருகே ராஜாஜி நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியோறினர்.  

இதற்கிடையில், திருமணம் நடந்த அன்று இரவே, கணேஷ், ‘ வீட்டு வேலைக்கு’ என கூறி அயனாவரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, அழைத்து வந்துள்ளார். இதுபற்றி மலர் கேட்டதால் கணேஷ் ஆத்திரமடைந்தார். மலரை தனியறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்தார். அவ்வப்போது, சிறுமியை கட்டாயப்படுத்தி அவருடன் கணேஷ் உறவு கொண்டார். மேலும் மலரின் கைகளை கட்டி, அவரது வாயில் துணியை திணித்து பலமுறை உறவு கொண்டார். ஒரு கட்டத்தில் கணேஷின் நடவடிக்கையால் விரக்தியடைந்த மலர், ‘என்னை எப்படியாவது விட்டு விடுங்கள்’ என்று கதறி அழுதுள்ளார்.

அதனால் அவரை சமாதானப்படுத்தி மது அருந்த வைத்து, 17 வயது சிறுமியுடன் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதை செல்போனில் வீடியோவாகவும் படம் எடுத்துள்ளார். இதனால் விரக்தியின் உச்சத்துக்கே மலர் சென்றார். அதோடு, அந்த காட்சியை அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார் கணேஷ். அதை பார்த்த 4 பேர், கணேஷ் வீட்டுக்கு வந்தனர். அந்த நண்பர்களுக்கு மலரை விருந்தாக்க முடிவு செய்தார். மலரின் அலறல் சத்தம் கேட்டு 4 பேரும் ஓடி விட்டனர். சிறிது நேரத்தில் மலரை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி போட்டு, வாயை துணியால் கட்டி, சித்ரவதை செய்தார்.

இதுபோன்ற, கொடூரமான சம்பவத்தால் மலர், செய்வதறியாது தவித்தார். எல்லை மீறியதால் வீட்டின் உரிமையாளரிடம், நடந்தவற்றைகூறி கதறி அழுதார். அவரது உதவியுடன் பெற்றோர் வீட்டுக்கு மலர் தப்பிச் சென்றார். பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறினார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து கணேஷை கைது செய்தனர். விசாரணையில், கணேஷ் கூறியதாக போலீசார் தரப்பில் கூறியதாவது: ‘சென்னையில் இது போல் பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துள்ளேன். அந்த சம்பவங்களை மலரிடம் கூறியிருக்கிறேன். மொத்தம் 11 பெண்களை திருமணம் செய்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன். இது ஒன்றும் எனக்கு புதிதல்ல’ என்றார்.  

வில்லிவாக்கம், அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுபோன்று, வேறுயாரோனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் காவல் நிலையத்தில் தொடர்ப்பு கொண்டு, கணேஷ் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், கணேஷ், 17 வயது பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் சித்திரவாதை செய்தது. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால். போக்சோ மற்றும் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-01-2021

  28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayallithaa_mmeerrr

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்