தமிழகம் முழுவதும் 18ம் தேதி முதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லாரிகளை ஒப்படைக்கும் போராட்டம்: மாநில சம்மேளனம் அறிவிப்பு
2021-01-14@ 00:34:32

சேலம்: தமிழகம் முழுவதும் 18ம் தேதி முதல் எப்.சி.,க்கு செல்லும் லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகி தெரிவித்துள்ளார்.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் நேற்று அளித்த பேட்டி: லாரி ஸ்டிரைக்கின் போது அதிகாரிகளிடம் நடந்த பேச்சு வார்த்தையில் வேகக்கட்டுப்பாட்டு கருவிக்கு சான்றிதழ் இருந்தால் போதும் என்றும், 80 கிலோ மீட்டருக்கு கீழ் இயக்கப்படும் லாரிகளுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவியை ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதோடு லாரிகளுக்கு எப்.சி. செய்வதையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் 5,000 லாரிகள் எப்.சி. செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தையில் அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்படும் அதிகாரிகளை கண்டித்து வரும் 18ம் தேதி முதல் எப்.சி., செல்லும் லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டத்தில் லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Tamil Nadu Regional Transport Office Lorry Handing over Struggle State Conference from 18th தமிழகம் 18ம் தேதி முதல் வட்டார போக்குவரத்து அலுவலகம் லாரி ஒப்படைக்கும் போராட்டம் மாநில சம்மேளனம்மேலும் செய்திகள்
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்
காவலர் உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்
தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி
கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்