ஆர்.எஸ்.மங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய மிளகாய் செடிகள்: பயிர்கள் அழுகுவதால் விவசாயிகள் கவலை
2021-01-13@ 20:19:34

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக கூடுதலாக விவசாயிகள் மிளகாயை சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக இரட்டையூரணி, புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, சவேரியார்பட்டினம், செங்குடி, பூலாங்குடி, வாணியக்குடி, சீனாங்குடி, வண்டல், வரவணி, சேத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு ஆண்டில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மிளகாய் செடிகள் நன்றாக குத்து செடிகளாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் பெய்து வரும் மழையால், வயல்களில் தண்ணீர் தேங்கி மிளகாய் செடிகள் மூழ்கியுள்ளன. இதனால் பெரும்பாலான செடிகள் வயல்களில் அழுகிவருகின்றன.
பல ஆயிரங்களை கடன் வாங்கி செலவு செய்து மிளகாய் சாகுபடி செய்துள்ள நிலையில், மழையால் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பரிதவித்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், தமிழகத்தில் அதிகமான மிளகாய் சாகுபடி செய்யும் மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது. இங்கு கூடுதல் மிளகாய் சாகுபடி செய்வது ஆர்.எஸ். மங்கலம் பகுதியாகும். இங்கு விளையும் மிளகாய் மிகவும் தரமாக இருக்கும் என்பதால் தமிழகம் முழுவதும் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது. இதற்காக வாரம் ஒருமுறை சனிக்கிழமை தோறும் சந்தை நடைபெறும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.
மேலும் செய்திகள்
வட மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.100 கோடி ரேயான் துணிகள் தேக்கம்
கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் நோட்டு, புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் ஓராண்டாக முடக்கம்
சேலம், ஏற்காடு தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள அறை முன்பு செல்போனில் பேசிய சிஆர்பிஎப் வீரர்: வேறு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவு
தென்காசி வாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகள் கொண்ட கன்டெய்னர்: திமுகவினர் புகாரால் அகற்றம்
அதிமுக மாஜி அமைச்சர் காலமானார்
மதுரையில் பெரும் பரபரப்பு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்: நடவடிக்கை கோரி திமுக வேட்பாளர்கள் போராட்டம்
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்