கோவா மாநில ராஜ்பவனில் குடும்பத்தினருடன் போகி கொண்டாடினார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு..!!
2021-01-13@ 09:59:04

பனாஜி: கோவாவில் தங்கியிருக்கும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு போகி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை அறுவடை திருநாள் என்றும் போற்றப்படுவதால் ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் இப்பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. அம்மாநிலத்தை சேர்ந்தவரான குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தற்போது கோவாவில் தங்கியிருப்பதால் அங்குள்ள ராஜ்பவனில் தன்னுடைய குடும்பத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினார். வீட்டின் முன்பு தீ மூட்டி, அவர் பொங்கல் பண்டிகையை வரவேற்றார்.
யாகசாலை பூஜை செய்வதுபோன்று, செங்கற்களை அடுக்கி குண்டம் அமைத்து அதில் பழைய பொருட்கள் மற்றும் கட்டைகளை அடுக்கி தீயிட்டு எரித்து போகி கொண்டாடினர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படுவது போகி பண்டிகை ஆகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. போகி பண்டிகையையொட்டி வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள். இதேபோலவே குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் தனது குடும்பத்தினருடன் போகி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார். ஆந்திர மாநில மந்திரி வெள்ளம்பள்ளி ஸ்ரீனிவாச ராவ் விஜயவாடாவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் போகியை கொண்டாடினார்.
மேலும் செய்திகள்
உத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பம்… மாட்டேன் என்ற யோகி அரசு ஜகா வாங்கியது… வாரஇறுதி லாக்டவுன்-ஐ உறுதி செய்தது!!
நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா
கொரோனா சிகிச்சைக்கு ராணுவம் உதவ வேண்டும்: ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தேவை இல்லை: பிரதமர் மோடி அறிவிப்பு
கும்பமேளாவுக்கு வந்த மாஜி மன்னருக்கு தொற்று
ராகுலுக்கு தொற்று உறுதி
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்