SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதவியை வைத்து பணம் சம்பாதித்தால் மீண்டும் பதவிக்கு வரமுடியாதுன்னு முன்னாள் அமைச்சர் கொந்தளித்ததை சொல்கிறார்: wiki யானந்தா

2021-01-13@ 00:20:58

‘‘பெருசா கல்லா கட்டி... தன் உயரதிகாரிகளுக்கு சிறு தொகையை அள்ளி வீசி.. கரெப்ஷனை கரெக்ட் செய்யும் அந்த பலே அதிகாரியை பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கார்ப்பரேஷன் கணக்கு பிரிவு மற்றும் கமிஷனரின் நேர்முக பொறுப்பு ஆபீசராக இருப்பவர் கல்லா கட்டுறதில் பலே கில்லாடியாம். இப்போது பரபரப்பா நடக்கும் ஸ்மார்ட் சிட்டி, பொதுப்பணிகளை செய்யும் கான்ட்ராக்டர்களிடம் 5 முதல் 10 பர்சன்ட் கமிஷன் வாங்கிய பிறகே, செட்டில்மென்ட் செக் கைக்கு போகுதாம். இதேபோல் டிரான்ஸ்பர் லிஸ்ட் போட்டும் ஆபீசரு, பலமா கல்லா கட்டுறாராம். ஆனால் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு சிறு துளியை கொடுத்துட்டு பெரும் தொகையை அமுக்கிவிடுகிறாராம். யாராவது கேட்டால் நமக்கு கமிஷனர் ரேஞ்சுக்கு சப்போட் இருக்கு. அதனால நம்மள யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு சேலஞ்ச் வேற விடுறாராம். ஏதாவது சிக்கல் வரும் என்று தெரிந்தால், அதை கரெக்ட் பண்ணுவதற்கு உயரதிகாரிகளையும் ப- வைட்டமின் மழையில் நனைய வைக்கிறாராம். இதனால் இந்த ஆபீசர் சொல்லுவதை சில உயரதிகாரிகள் வேதவாக்காக நம்புறாங்களாம். கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நடந்த ரூ.86 லட்சம் முறைகேட்டில் இந்த ஆபீசருக்கு பெரும் பங்கு உள்ளதாம். ஆனாலும் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்... சிறு தொகையை வாங்கிய அதிகாரிகள்...பெருந்தொகையை வாங்கிய கீழ்மட்ட அதிகாரியை கண்டிக்க முடியாமல் அவஸ்தை படறாங்களாம்...’’என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகாரிகள் துணையோடு ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் புரோக்கர்கள் பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல இருக்குற அணையான ஒன்றியத்துல டைகர் மேடு பகுதி இருக்குது. இந்த பகுதியில இருக்குற கிராம மக்கள் நூறு நாள் வேலை திட்டத்தை நம்பித்தான் இருக்குறாங்க. இதுல அணையான ஒன்றியத்துல நூறு நாள் வேலை திட்ட அட்டை புதுசா வாங்க விண்ணப்பிச்சா, போயிட்டு அப்புறமா வாங்கன்னு சொல்லி சொல்லியே இழுத்தடிக்குறாங்களாம். இப்படி மாசக்கணக்குல அலையவிட்ட பின்னாடி, அணையான ஒன்றியத்துல இருக்குற புரோக்கருங்க விண்ணப்பதாரருங்க கிட்ட வந்து, ஆயிரம் ரூபாய் கொடுத்தா நூறு நாள் வேலை திட்ட கார்டு உடனே கிடைக்க ஏற்பாடு செய்றோம்னு பேரம் பேசுறாங்களாம். புரோக்கருங்க கிட்ட ஆயிரம் ரூபாய் கொடுத்த பின்னாடித்தான் கார்டு கிடைக்குதாம். இப்படித்தான் அணையான ஒன்றியத்துல இருக்குறவங்க கார்டு வாங்க வேண்டியுள்ளதாம். ஆயிரம் ரூபாய் கொடுத்த மேட்டரை வெளியே சொன்னா, வேலை கிடைக்காது, வேலை கிடைச்சாலும் கூலி கிடைக்காதுன்னு ஏஜென்டுங்க மிரட்டுறாங்களாம். இதுல அதிகாரிகள் கூட்டும் இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பணி நியமனத்தில் பணம் சுருட்டிய வேளாண் அதிகாரியை என்ன செய்யலாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் வேளாண்மை துறையில் இணை இயக்குநர் பொறுப்பில் பன்னீரான அதிகாரி ஒருவர் பணியாற்றி வந்தார். துணை இயக்குநர் பதவி வகிக்கும் இவர் இணை இயக்குநர் இல்லாத காலங்களில் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தாராம்... இப்படி 3 முறை இணை இயக்குநர் பொறுப்பில் இருந்த காலங்களில் வேளாண்மை துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி 18 பேரிடம் இருந்து ரூ.18 லட்சம் வரை அடாவடியாக வசூலித்தது கொஞ்ச கொஞ்சமா துறை ஊழியர்கள் மத்தியில் கசிந்து வருகிறதாம்.. கடலோர மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்படும் இந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி பல லட்சம் வரை சுருட்டியிருப்பது விவசாயிகளை கொதிப்படைய செய்துள்ளதாம்... ஒரு பக்கம் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து வஞ்சிக்கிறது... மறுபுறம் வேளாண் துறையில் ஊழியர்கள் பதவிக்கு பணம் வாங்கும் அவலம் நடக்கிறது. இப்படி பணம் கொடுத்து சேரும் ஊழியரின் மனநிலை பணம் வாங்கும் நிலையில்தான் இருக்கும்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பதவியை வைத்துக்கொண்டு.. பணம் சம்பாதிக்கலாமானு இலையின் முன்னாள் அமைச்சர் கேள்வியால்... நீங்க சம்பாதித்தபோதுன்னு  இலை தொண்டர்கள் தங்களுக்குள் என்ன பேசிக் கொண்டனர்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மற்றும் மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் நேற்று முன்தினம் சென்னையில் திமுகவில் இணைந்தனர். இதில் அதிகபட்சமாக இலை  தரப்பில்தான் சேதாரம் அதிகமாம். இதனால இலையில் முன்னாள் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட மாணவர் அணி என பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் கூண்டோடு காலியாகி இருக்காம். இதனால் உள்ளூர் இலை தரப்பு அதிர்ந்து போய் இருக்காம். மேலும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இலை முக்கிய நிர்வாகிகளும், வேலூரை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளரும் எந்த நேரமும் திமுகவில் இணையலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அடுத்தடுத்து இலையில் இருந்து நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை வெளியேறி வருவதால் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் வெளிப்பாடாக மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மூக்கூர் பெயரை கொண்டவர் உள்ளூர் நிர்வாகிகளை வறுத்தெடுத்து வருகிறாராம். அடிமட்ட தொண்டனை மதித்து செயல்பட வேண்டும். பொறுப்பு வாங்கிக் கொண்டால் மட்டும் போதாது. களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். இல்லையெனில் உங்களை பற்றி தலைமைக்கு புகார் அனுப்பி விடுவேன் என்று மிரட்டி வருகிறாராம். தேர்தலுக்காக நிர்வாகிகளை விரட்டி வேலை வாங்குவதில் தவறில்லை. ஆனால் கட்சியினர் மத்தியிலேயே நிர்வாகிகளை வா, போ என ஒருமையில் பேசி தனது வேலைக்காரர்களைப்போல அவர்களை நடத்துவதால் பெரும்பாலான நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டு வருகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-03-2021

  02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-modi1

  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

 • myan-firing1

  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

 • itaklyyychha

  இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

 • 01-03-2021

  01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்