SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரையின் அரசியல் ஆபரேஷன் சக்ஸஸ் ஆகுமா என்பதுபற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-01-12@ 02:09:13

‘‘பணத்துக்கு ஆசைப்பட்டு தமிழக மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் காக்கிகளை, என்ன சொல்வது...’’ என்று வேதனை தெரிவித்தார் பீட்டர் மாமா.
‘‘கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு 3 லாரிகளில் கோழி கழிவு, மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரிகள் சிக்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் கன்ெடய்னர் லாரிகள்  திரும்பி வரும்போது அதில் மீன், கோழி, இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது. இதன் அபாயம், அச்சத்தை உணராமல் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையிலும் கோழி கழிவுகள் சர்வ சாதாரணமாக  தென்காசி மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. செங்கோட்டை கோட்டை வாசல் அருகே ேபாலீஸ் செக்போஸ்ட் இருந்தும் அவர்கள் கண்டுகொள்ளாமல் மாமூல் வாங்கிக் கொண்டு இதுபோன்ற லாரிகளை விடுவித்து விடுகின்றனராம்.  அவர்களுக்கு தமிழக மக்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாததையே இது காட்டுவதாக சுகாதார துறையினர் சொல்கிறார்கள். தற்போது புளியரை அருகே கால்நடைத் துறை அமைத்துள்ள சோதனைச் சாவடியில்தான் இந்த லாரிகள்  சிக்கியது. அதற்கு பின்னர்தான் வந்துள்ளது கோழி கழிவுகள் என்பதை அறிந்து அதிகாரிகள் அவற்றை கேரளாவிற்கே திருப்பி அனுப்பினர். கேரள போலீசாக இருந்தால் அந்த வாகனம் இப்படி நுழைய முடியுமா? தமிழக போலீஸ் தான்  அபாயத்தை உணராமல் அசட்டையாக இருக்கிறது என்று மேலும் குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியின் முட்டுக்கட்டையால்... இரண்டு ஆண்டாக தூங்கும் வழக்கை பற்றிச் சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரத்து பிரபல பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி பிரிவில் 2014-15ல் படித்தவர்களுக்கு தேர்வே எழுதாமல், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிய விவகாரத்தில் மூவர் மீது ஜூலை 2019ல் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு,  லஞ்ச ஒழிப்புத்துறைக்கான விசாரணைக்கு ஒப்புதல் தந்தது. இவர்களது அறிக்கையின்பேரில், தேர்வு அதிகாரி உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட் ஆனாங்க... 50 கோடிக்கும் அதிகமாக திரும்ப பெற லஞ்ச ஒழிப்பு துறை எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லையாம். அறிக்கை மட்டும் தாக்கல் செய்து தன் கடமையை முடித்துக்கொண்டதாம். என்ன பின்னணி என்று விசாரித்தால் பகீர் தகவல் ஒன்றை சொல்கிறார்கள் பல்கலை ஊழியர்கள். அதாவது, புகாரில் சிக்கிய மூவரில் ‘ஒரு  அதிகாரியின் நெருங்கிய உறவினர்’, லஞ்ச ஒழிப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கிறாராம். இதனாலேயே இவர்கள் மீதான நடவடிக்கைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை விழுந்து மூடும் நிலையில் இருக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேளாண் துறையில் மத்திய அரசுதான் வஞ்சிக்கிறது என்றால்... வேளாண் அதிகாரி ஒருவர் பதவி நியமனத்துக்காக ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கி உள்ள கதை தெரியுமா...’’ என வருத்தப்பட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை வருவாய் துறையில் தெற்கு வாழ்கிறதாம்... வடக்கு தேய்கிறதாமே, எப்டி...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை  மாவட்ட வருவாய்த்துறையில், வடக்கில் பணிபுரியும் மூன்றெழுத்து பெயர் கொண்ட அதிகாரிக்கு  கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி  சர்க்கரை ஆலைக்கு இடமாறுதல் உத்தரவு  வழங்கப்பட்டது. காரணம், இவர், ஒரே  இடத்தில் 3 ஆண்டுக்கும் மேல் பணிபுரிந்து வருவதால், இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இவர், அந்த உத்தரவை ஏற்று, அமராவதி  செல்லவில்லை. மாறாக, உத்தரவை வாங்கி குப்பை  தொட்டியில் வீசிவிட்டு, இங்கேயே  பணியை தொடர்கிறது. அதே நேரத்தில், தெற்கு பகுதி அதிகாரி, சேலம்  மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, உத்தரவு வழங்கப்பட்டது. அவர்,  சப்தம் இல்லாமல் உத்தரவை வாங்கிக்கொண்டு சேலம்  சென்று விட்டார். வடக்கு  மட்டும் நகர மறுப்பது ஏன்... வருவாய் அதிகமாக வருவதாலா... அரசியல் பின்புலமா என்ற பேச்சு வருவாய் துறையில் பலமாக ஓடுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில் நடக்கும் தாமரையின் அரசியல் ஆபரேஷன் பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் பவர்புல் பெண்மணிக்கு எதிராக ஆளும் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. போராட்டம் துவங்கியது. அப்போது சில எம்எல்ஏக்கள் போராட்டத்தின்போது அங்கேயே படுத்து எழுச்சியை காட்டினார்களாம். இரண்டாவது நாளில்  ஸ்ருதி குறைத்து மாலையில் கிளம்பி சென்றனர். மூன்றாம் நாளில் முதல்வர், சில அமைச்சர்களை தவிர்த்து மற்றவர்களை போராட்ட இடத்தில் பார்க்க முடியவில்லையாம். அதோடு ஸ்டார் வேட்பாளர் சிவமானவரை இழுக்க பாஜ முயற்சித்து  வருகிறது. அதோடு அவரது மாமனார் கட்சியான என்.ஆர் காங்கிரசும் வலைவீசி காத்திருக்கிறது. ஆனால் சிவமானவரு பிடிகொடுக்காமல் இருக்கிறார். வரும் தேர்தலில் கதர்கட்சியில் அவர் போட்டியிடவில்லை என்பது முடிவாகிவிட்டது.  இதற்கிடையே சிவமானவரு உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கிய புள்ளியை வளைத்து ஆப்ரேஷன் லோட்டசை தாமரை தரப்பு துவக்கிவிட்டதாம். இன்னும் சில நாட்களில் கதர்கட்சியின் ஆட்சியை முடிக்க நேரம் பார்க்கிறார்களாம். ஆளும்  கதர்கட்சியில் இருந்து 5 எம்எல்ஏக்கள் ஆட்சியை முடிக்க ராஜினாமா கடிதத்துடன் ராஜ்நிவாஸ்க்கு எப்போது வேண்டுமானாலும் செல்வார்கள் என்ற தகவலால் புதுச்சேரி அரசியல் ஆட்டத்தை சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. எது  வேண்டுமானால் நடக்கலாம் என்ற நிலையில் புதுச்சேரி அரசியல் வேகமெடுத்திருக்கிறது. ஆப்ரேஷன் லோட்டஸ் என பெயர் வைத்து கர்நாடக துணை முதல்வர் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதை உளவுத்துறை மூலம்  மோப்பம் பிடித்த முன்னவரு, அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.,,’’ என்றார் விக்கியானந்தா.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-03-2021

  02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-modi1

  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

 • myan-firing1

  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

 • itaklyyychha

  இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

 • 01-03-2021

  01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்