தடையில்லா சான்றுக்கு 20 ஆயிரம் லஞ்சம்: கலெக்டரின் நேர்முக உதவியாளர் கைது
2021-01-12@ 00:38:24

சென்னை: வீட்டுமனை பிரிவுக்கு தடையில்லா சான்று வழங்க 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற கலெக்டரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூரை சேர்ந்தவர் ஆனந்தன் (52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் மறைமலைநகர் நகராட்சி நின்னகரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் வீட்டுமனை பிரிவு ஏற்படுத்தி விற்பனை செய்ய திட்டமிட்டார். இதற்காக தடையில்லா சான்று கேட்டு செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியில் உள்ள வேளாண் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் விண்ணப்ப மனு அளித்தார். ஆனால் ஆனந்தனுக்கு தடையில்லா சான்று வழங்கப்படவில்லை.இதுகுறித்து, இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸின் நேர்முக உதவியாளராக உள்ள வேளாண் அதிகாரி சுகுமாரிடம் நேரில் சென்று ஆனந்தன் கேட்டார். அப்போது, வீட்டுமனை அமைக்க தடையில்லா சான்று வழங்க ₹20ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தடையில்லா சான்று தர முடியாது, என கலெக்டரின் நேர்முக உதவியாளர்
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்தன் இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 20 ஆயிரத்தை ஆனந்தன் நேற்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகுமாரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், சுகுமாரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் அதன்படி, செங்கல்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
குடிநீர் வாரிய ஊழியர் கைது
புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது வீட்டிற்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பு கோரி, 39வது வார்டு குடிநீர் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, அலுவலக உதவியாளரான தண்டையார்பேட்டையை சேர்ந்த ஹரி ராவ் (55), இணைப்பு வழங்க 15 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்த், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ₹15 ஆயிரத்தை ஆனந்த் நேற்று ஹரி ராவிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர். விசாரணையில், அதிகாரிகளுக்கு பணம் தரவேண்டும் என்றும், அப்போதுதான் புதிய இணைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அரியலூரில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைகளின் உடல்கள்: போலீசார் விசாரணை
புதுக்கோட்டையில் அடகு வைத்த 305 சவரன் தங்க நகைகள் கையாடல்!: நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேர் கைது..!!
ஹரியானாவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் திருட்டு
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய 926 கிராம் தங்கம் பறிமுதல்
பாலிசி பணத்தை திரும்ப கொடுக்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை
கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!