SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முழுமையான சோதனைக்கு பிறகே தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும்; ரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர்: தடுப்பூசியால் கொரோனாவை அழிக்க முடியுமா என்பதைவிட இறப்புகளை தவிர்க்கலாம்; ப.சாமிநாதன், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம்

2021-01-11@ 01:54:36

கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருப்பது வரவேற்புக்குரியது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியது. இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் தடுப்பூசிகளை  அனைவருக்கும் போட வேண்டும். அப்பொழுதுதான் சமூக எதிர்ப்பு சக்தியை தடுப்பூசிகள் மூலம் பெற முடியும். முழுமையான பயனை பெற முடியும். தடுப்பூசிகள் கொரோனா தடுப்பில் மகத்தான பங்காற்றும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் தடுப்பூசி வழங்குவதில் கூடுதல் கவனம் வேண்டும். இந்தியாவில் பயன்படுத்தப்பட உள்ள கோவிட் தடுப்பூசிகளின் திறன், பாதுகாப்பு குறித்த ஆய்வுகளின் முடிவுகளை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும். அது பல நாட்டு மருத்துவர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

கோவிட் தடுப்பூசிகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிடாமல் அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவருவது அவ நம்பிக்கைகளையே உருவாக்கும். ஏற்கனவே மத்திய அரசு சென்ற ஜூலை மாதமே இரண்டாம் கட்ட பரிசோதனைகள் கூட தொடங்கப்படாத நிலையில் ஆகஸ்ட் 15  சுதந்திர தினத்தன்று தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்தது. முழுமையான சோதனைகள் முடியாமல் இது போன்று அவசர கோலத்தில்  அறிவியலுக்கு புறம்பாக தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கூடாது என கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன் பிறகு அந்த அறிவிப்பை மத்திய அரசு  கைவிட்டது. அதே போன்ற முயற்சியை தற்பொழுதும் மேற்கொள்வது சரியல்ல. கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடியாத நிலையிலும், அதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக வெளியிடப்படாத நிலையிலும் அதன் திறன் குறித்த எந்த விதமான குறைந்த பட்ச விவரங்கள் கூட வெளியிடப்படாத நிலையில் அதை பயன் பாட்டுக்கு கொண்டுவருவது சரியல்ல.

சோதனைகள் முழுமை பெற்று முடிவுகளை வெளிப்படையாக அறிவித்த பிறகே அதை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இப்போது கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெறும் பொழுதே, மருத்துவப் பணியாளர்களுக்கு அத்தடுப்பூசியை  வழங்குவதும் மூன்றாம் கட்ட பரிசோதனை போன்றதுதான். எனவே, தன்னார்வலர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணம் போன்று தற்பொழுது தடுப்பூசியை போட்டுக் கொள்வோர் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தடுப்பூசிகளை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உருவாக்கவும் உற்பத்தி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் உற்பத்தி செய்யும் பொதுத்துறை  நிறுவனங்களை மூடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். இதேபோல், இந்தியா முழுவதும் ஏராளமான வைரஸ் ஆராய்ச்சி மையங்களை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு சென்ற ஜூலை மாதமே இரண்டாம் கட்ட பரிசோதனைகள் கூட தொடங்கப்படாத நிலையில் ஆகஸ்ட் 15  சுதந்திர தினத்தன்று தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்தது. முழுமையான சோதனைகள் முடியாமல் இது போன்று அவசர கோலத்தில்  அறிவியலுக்கு புறம்பாக தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கூடாது என கடும் கண்டனங்கள் எழுந்தன.உயிர்கொல்லி நோய்களுக்கு தான் தடுப்பூசி போடப்படும். உயிர்கொல்லும் தன்மை, சமூகத்தில் நோய்ப்பரவல் ஆகியவற்றின் அடிப்படையில் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சளி, இருமல் போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கவில்லை. ஆனால் போலியோவிற்கு தடுப்பூசி போடப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், சிறுநீரகம் பாதித்தவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துகொண்டு இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் அவர்களை பிழைக்க வைப்பதும் முக்கியமானதாக உள்ளது.

எனவே, இதுபோன்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு கூறுகிறது. அடுத்ததாக கொரோனா நோய் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ள சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவை அனைத்துமே அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான் தடுப்பூசி போடப்படுகிறது. வியாதியை தடுக்கும் சக்தி உள்ளதா, தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை சேப்டி புரொபைல் எனப்படும் 3 கட்ட சோதனைகளை முடித்த பிறகே தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், 2 கட்ட சோதனைகளிலேயே  தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசரம் என்ன என பொதுத் தளத்தில் விவாதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு நோய்களுக்கு நாம் தடுப்பூசி போட்டு கொண்டு தான்  வருகிறோம். தடுப்பூசிகள் 100 சதவீதம் வேலை செய்யுமா என்றால் அது கேள்விகுறிதான்.

அதனால் தான் 3ம் கட்ட பரிசோதனைகள் இன்றியமையாதவை. சேப்டி புரொபைல் முடிக்கப்படவில்லை என்பது தான் சர்ச்சைக்குரியதாகவும், மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இந்தியாவில் கொரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்த கடந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை சுகாதரத்துறை பணியாளர்கள் சிறந்த பங்களிப்பை செய்தனர். தடுப்பூசி போடப்பட்டு புதிதாக தொற்று வருவதை தடுக்க வேண்டும் என்பதே எங்களை போன்ற சுகாதாரத்துறையில் உள்ளவர்களுக்கு விருப்பம். சுகாதாரத் துறையில் உள்ள எங்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிப்பது சிறந்ததே.

இந்த தடுப்பூசியால் கொரோனா நோய்த்தொற்றை முற்றிலும் அழிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இறப்புகளை தவிர்க்கலாம் என்பது உண்மை.  பிரதமர் மோடி முதலில் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை தான். ஆனால் இதையே காரணம் காட்டி தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்தக் கூடாது. 3ம் கட்ட பரிசோதனைகள் இன்றியமையாதவை. சேப்டி புரொபைல் முடிக்கப்படவில்லை என்பது தான் சர்ச்சைக்குரியதாகவும், மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்