பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறிய வீடு வீடாக கணக்கெடுப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
2021-01-11@ 01:46:53

புதுடெல்லி: கொரோனா காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறியவும், அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
* பள்ளியில் இருந்து பாதியில் நின்ற மாணவர்களை அடையாளம் காண வீடு தோறும் சென்று கணக்கெடுக்க வேண்டும்.
* புலம் பெயர்ந்துள்ள குடும்பத்தாரின் குழந்தைகள் தற்போது பள்ளிக் கல்வியை நிறுத்துவதற்கான சாத்தியம் அதிகம். எனவே, அவர்களைக் கண்டறிவதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
* பள்ளிகள் மீண்டும் திறப்பது தொடர்பான தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம்.
* மாணவர் சேர்க்கையின்போது காலதாமதம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்தவும், இந்த ஆண்டு கல்வியை நிறுத்திய மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் மத்திய அரசு பரிந்துரைக்கிறது.
* கல்வித்தரம் பாதிக்காமல் இருக்க தொழில்நுட்ப வசதிகள், சீருடைகள், புத்தகங்கள், மதிய உணவு போன்றவை மாணவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.
* சிறு கிராமப்புறங்களில் நடமாடும் வகுப்புகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாம்.
* பள்ளி பாடங்கள் கற்பித்தலுக்கு அப்பாற்பட்டு, படைப்பாற்றலையும், பிரச்னைகளைத் தீர்க்கும் திறனையும், எண்கள் தொடர்பான அறிவையும் மாணவர்களிடம் உருவாக்குவது இன்றைய தேவை.
மேலும் செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதில் பாரபட்சம் குஜராத்துக்கு 1200 மெட்ரிக் டன் ராஜஸ்தானுக்கு 124 மெட்ரிக் டன்: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
ரூ.300 டிக்கெட்டில் 90 நாட்களுக்குள் ஏழுமலையானை தரிசிக்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை நாடாளுமன்ற அவசர கூட்டத்தைக் கூட்டுங்கள்
மோடி பதவி விலக கோரி ஹேஷ்டேக்: டிரெண்டிங்கில் நம்பர் 1
கொரோனா வைரசுக்கு எதிராக இரட்டை மாஸ்க் தரும் இரட்டிப்பு பாதுகாப்பு: ஆய்வில் தகவல்
மின் வாகன உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெறும்: நிதின் கட்கரி நம்பிக்கை