அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல் சாலை வியாபாரிகளுக்கு கடனை விரைந்து வழங்க வேண்டும்
2021-01-11@ 00:26:27

சென்னை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சாலை வியாபாரிகளுக்கு கடன் தொகை விரைந்து வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்திலிருந்து 2.62 லட்சம் பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் 1.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதிலிருந்து கடன் வழங்க 44,000 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடன் வழங்கத் திட்டமிட்டுள்ள தொகையே ரூ.10,000 தான் என்கிற நிலையில் கடந்த 5 மாதங்களில் 27,055 பேருக்குதான் கடன் வழங்கப்பட்டிருப்பதாக வரும் செய்தி வருத்தமளிக்கிறது. கொரானாவால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் சிறு பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். அதை பெரிதுபடுத்தாமல் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் கடன் தொகையை விரைந்து வழங்கிட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பது ஏன்?.. கமல்ஹாசன் கேள்வி
சொல்லிட்டாங்க...
தேர்தல் ஆணையத்துக்கு மம்தா வேண்டுகோள் மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: பிரசாரத்தை குறைக்க முடிவு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
தீவிரமடையும் கொரோனா பரவல்!: தேர்தல் பிரச்சார நேரத்தை குறைத்துக்கொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்