SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலவச சைக்கிளை இலைக்கட்சிக்காரங்க சுருட்டியதால் ஆசிரியர்கள் கொதித்து போயிருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2021-01-11@ 00:12:56

‘‘குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து... கம்மலை கழட்டின கதையாக மாங்கனியில போட்டோ ஆசை காட்டிய இலை தரப்பினர் சைக்கிளை திருடியதால், மாணவர்கள் கண்ணை கசக்கறாங்களாமே...’’ வேதனையுடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கவர்மென்ட் ஸ்கூல்ல பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுக்குறாங்க. இப்போ எலெக்ஷன் நேரம் என்பதால், இதக்கூட இலைகட்சியினர் பெரிய விழாவா செலிபரேட் பண்றாங்க. சமீபத்துல, விவிஐபி தொகுதியில இருக்குற கொங்கண சித்தர் வந்துபோன, பருத்தி ஏலத்துக்கு பேர் போன ஊர் கவர்மென்ட் ஸ்கூல் பசங்களுக்கு, போன வாரம் சைக்கிள் கொடுத்தாங்க. 300 பேர வரவச்சு, சைக்கிள் முன்னாடி நிறுத்தி பசங்ககிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க. பங்ஷன்ல கலந்துகிட்ட இலை கட்சி ஒன்றிய நிர்வாகிங்க, போட்டோவுக்கு போஸ் கொடுக்க எல்லாரும் வாங்கனு, பசங்கள வான்டடா கூப்பிட்டாங்க. பசங்களும் ஆர்வத்துதோட போட்டோ எல்லாம் எடுத்துட்டு வந்து பாக்கும்போது, புதுசா கொடுத்த சைக்கிள் மாயமா போச்சாம். எங்க தேடியும் கிடைக்காம, விவகாரம் போலீஸ் வரைக்கும் போயிருச்சாம். போலீசார் விசாரித்து வர்றாங்க... என்னடா சைக்கிள் எங்கேனு அந்த பசங்களின் அம்மா கேட்டபோது போட்டோவுக்கு ேபாஸ் கொடுத்துட்டு வந்தா டீச்சர் கொடுத்த சைக்கிள் காணலை... போட்டோ எடுத்த இலை நிர்வாகிகளையும் காணல என்று அழுது புலம்பி இருக்கின்றனர். இதனால கொதித்து போன டீச்சர்ஸ்... அரசு விழாவுல கலந்து கொண்டதே தப்பு... இதுல சைக்கிள் வேற திருடிட்டு போறாங்க... படிக்குற பசங்களாச்சே என்ற நினைப்பே கொஞ்சம் கூட இல்லை என்று கொதித்து போய் இருக்காங்களாம்... இனி கட்சி பெயரை சொல்லிட்டு யாராவது வரட்டும்னு உறுமுறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட கதை ஒன்றை சொல்லேன்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு திட்ட நடவடிக்கை தொடர்பாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தக்கலை மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் லேப் டெக்னீஷியன், தூய்மை பணியாளர், மருந்து தெளிப்பாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு அவுட்சோர்சிங் மூலம் பணியாளர்களை எடுத்தாங்க. இவங்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லையாம். பொங்கல் பண்டிகை வரும் வேளையில் அதற்கு முன்னதாகவேனும் தங்களுக்கு சம்பளம் கிடைக்குமா என்று தற்காலிக பணியாளர்கள் ஏக்கத்தில் இருக்காங்க. வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள், அரசின் கொரோனா கால நடவடிக்கைகளுக்காக அந்த பணிகளை விட்டு தற்காலிக பணியில் சேர்ந்தாங்களாம். இவற்றில் பல பிரிவுகளை சேர்ந்தவங்களுக்கு வேலை இல்லைனு வேறு சொல்லிட்டாங்களாம். கடைசியில் அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட மாதிரி பழைய வேலைக்கும் போக முடியாமல் தவிக்கிறாங்களாம்... இதுல சம்பளம் வேற வராததால் வேதனையில் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெற்றி பெற்ற இடத்துல தாமரையை படரவிடக்கூடாது.... இலை தான் பச்சை பசேல்னு இருக்கணும்னு இலை நிர்வாகிகள் முடிவெடுத்து இருக்காங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ இலை தரப்புடன் கூட்டணி வைத்துள்ள தாமரை தரப்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தொகுதியை தங்களுக்கு கேட்கிறதாம். அவ்வாறாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தொகுதியின் பட்டியல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. இது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்ட அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டங்களில் இலை தரப்பின் முக்கிய நிர்வாகிகளை தேர்ந்ெதடுத்து போட்டியிட திட்டமிட்ட தொகுதிகளை தேசிய கட்சிக்கு ஒதுக்கி விட்டால் நமது எதிர்காலம் என்னாவது என உள்ளூர் இலை பிரபலங்கள் அதிர்ச்சியில் இருக்காங்களாம். இதனால் தங்களது ஆதரவு தலைவர்கள் மூலம் தொகுதியை தாமரை தரப்புக்கு கொடுத்தால் ஏற்படும் பாதகங்களை பட்டியலிட்டுள்ளனர். காலம், காலமாக நாம் போட்டியிட்டு வென்ற தொகுதியை கூட்டணி என்பதற்காக தாமரை தரப்புக்கு விட்டுக் கொடுத்தால் ஓட்டுக்கள் சிதறி விடும். சிறுபான்மை மக்களும் இந்த தொகுதிகளில் கணிசமாக உள்ளதால் நமது இமேஜ் ஒட்டுமொத்தமாக சரிந்து விடும். எனவே இந்த தொகுதிகளில் நாம்தான் போட்டியிட வேண்டும் என இலை தரப்பு தலைமைக்கு உள்ளூர் தலைவர்கள் ரகசிய தூது அனுப்பியுள்ளாங்களாம். அது மட்டுமல்லாது உளவுத்துறையினரிடமும் இந்த தகவலை கசிய விட்டுள்ளனராம். இதுதான் தென் மாவட்ட இலை கட்சியினர் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எங்கே போனாலும் சிலர் திருந்தவே மாட்டாங்க போல...’’ என்று விரக்தியுடன் சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘கல்லூரி மாணவிகள் விஷயத்தில் விளையாடிய பேராசிரியையுடன் தொடர்பில் இருந்த அதிகாரி, எப்படியோ வேலை வாங்கிவிட்டார். தற்போது குமரி மாவட்டத்தில் பணியில் இருக்கிறாராம். அவர் குமரி மாவட்டத்தில் வந்த பின்னரும் பல புதிய ‘தொடர்பு’களை ஏற்படுத்திக்கொண்டு தனது தனிப்பட்ட நேரத்தை அவர்களுடன் செலவிட்டு வருகிறாராம். இதில், தான் வழக்கமாக செல்கின்ற வீடு ஒன்றில் இருந்தவரின் மகள் மீதும் கையை வைத்துவிட்டாரம். தற்போது நிலைமை ‘கைவிட்டு’ போக அவர்களோ 25 லகரம் தந்தால்தான் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவோம்னு சொல்கிறார்களாம். அதிகாரியோ 5 லகரம் தர்றேன்னு கெஞ்சுகிறாராம். இந்த மாதிரி அதிகாரிகள் அந்தமான் செல்லில் அடைத்தாலும் திருந்த மாட்டார்கள் போல என்று அவரை தெரிந்தவர்கள் கரித்து கொட்டுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 100farmmmm

  100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

 • train4

  கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

 • mars-4

  செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

 • hgoteell__sss

  தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!

 • 04-03-2021

  04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்