SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹஸ்பெண்ட் லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்கியும் ஒயிப் புத்தாண்டு கிப்ட் வாங்கிய நிஜக்கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2021-01-10@ 00:38:50

‘‘ஜல்லியை நம்பிபோனா நம்மள சல்லி சல்லியாக மாற்றிடுவாங்களோன்னு இலை கட்சி தீபம் மாவட்டத்துல அதிர்ச்சியில இருக்காங்களாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தீபம் மாவட்டம் வந்தவாசி ஏரியாவுல, இலை கட்சியோட நகர செயலாளராக தனது பெயருக்கு முன்னாள் ஓட்டலை அடைமொழியாக கொண்டவர் இருந்து வர்றாரு. இவரை மாற்றிவிட்டு அந்த பொறுப்புக்கு வரணும்னு, பெயருக்கு முன்னால் ஜல்லியை அடைமொழியாகக் கொண்ட முன்னாள் நகராட்சி டெபுடி தலைவர் போட்டி போடத்தொடங்கினாராம். பத்து பைசா கைகாசு செலவு செய்யாதவரு... அதனால கூட்டத்துக்கான வேலைங்க முடிச்சபின்னாடி தான் வருவாராம். ஏன்னா? எல்லாம் செலவுக்கு பயந்து தானாம்.

இந்நிலையில் அவருக்கு நகர செயலாளர் பதவி ஆசைய காட்டி, ஒரு பொதுக்கூட்டத்தையே நடத்திட்டாங்களாம். இதனால, நான்தான் அடுத்த நகர செயலாளர்னு கூறிவந்த நிலையில், கடந்த வாரம் அறிவிச்ச நிர்வாகிகள் பட்டியல்ல, ஜல்லி பெயரை கொண்டவருக்கு, ஏற்கனவே இருந்த மாவட்ட பிரதிநிதி பொறுப்பையும் பிடுங்கிட்டாங்களாம். ஜல்லிய நம்பி சென்னைக்கு போன நம்மள பலிகடாவாக ஆக்கிட்டு, ஜல்லி தப்பிச்சுடுவாருன்னு, அவர்கூட சென்னைக்கு போக யாரும் தயாராக இல்லையாம். நகர செயலாளர் பதவி வரும்னு நெனைச்சு, பொதுக்கூட்டத்துக்கும் செலவு செஞ்சி, இருந்த பொறுப்பும் கொடுக்காம ஏமாத்திட்டாங்களேன்னு கட்சி மேல ஜல்லி கடும் அதிருப்தியில இருக்காராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘தலைக்கு மேலே வெள்ளம் போனால், சாண் என்ன... முழம் என்ன...’’ பாடியபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் வலியை நேரடியா அனுபவித்தவர் ஹாட் மாவட்ட மத்திய சிறை ஜெயமான உயரதிகாரி... சோதனை நடந்தபோது அவரது ரத்த ஓட்டம் 120 பல்ஸ் தாண்டி ஓடியதாம். இதனால் இது எனக்கான வலை இல்லை... என் கணவர், சென்னை டாஸ்மாக் மேலாளரின் அலுவலகத்தில் நடந்த ரெய்டை தொடர்ந்து, வேலூரில் ரெய்டு நடந்தது. நான் மிஸ்ஸஸ் கிளீன் என்று தன்னை தானே பாராட்டிக் கொண்டாராம். இந்த டென்ஷனை குறைக்க ஜெயமான ஜெயில் உயரதிகாரி ஒரு வாரம் விடுமுறையில் மாவட்டத்தை விட்டே டூர் போய்விட்டாராம்.

சரியாக புத்தாண்டிற்கு முன்னதாக வேலூருக்கு வந்த அவர், புத்தாண்டு தினத்தன்று, அதிகாரிகளிடம் இருந்து புத்தாண்டு பரிசுகளை வாங்கி குவித்தாராம். ரெய்டு நடந்தும், பயமின்றி மீண்டும், கில்லிபோல பரிசு வாங்கிய டிஐஜியின் தில்லை பார்த்து, சிறை காவலர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனராம். அதுல ஒரு அதிகாரி... வீட்டிலேயே ரெய்டு அடிச்சுட்டாங்க... அதுலேயே பாதி பெயர் கெட்டுப்போச்சு... இனி என்ன ஆகப்போகுது என்ற நினைப்பில்தான் பரிசுகளை வாங்கி குவித்தாராம். அப்புறம் யாரா இருந்தாலும் இந்த ஜெயிலுக்கு தானே வரணும்... அப்போது நான் பார்த்து கொள்கிறேன்...’’ என்று பேசியதாகவும் தகவல் ஓடுது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆன்லைன் பட்டாவுக்கு ‘ஆப்பு’ வைத்த விருது ெகாடுக்கும் மாவட்டம் பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘விருது தரும் மாவட்டத்தில் உள்ள பல தாலுகாக்களிலும் ஆன்லைன் பட்டா முறைக்கு ஆப்பு வைத்து இருக்காங்களாம். இதுதொடர்பா விசாரித்தபோது, 2013ல் ஆன்லைனில் நிலம், குடியிருப்பு பகுதியை ஏற்றியபோது ஏற்பட்ட தவறினால் அப்படியே கிடப்பில் போட்டுட்டாங்களாம். இதனால் மாவட்டத்தில் தற்போது வரையிலும் மக்களால் ஆன்லைன் பட்டாவைப் பெற முடியவில்லையாம். பொதுமக்களும், விவசாயிகளும் வருவாய்த்துறை வழங்கிய ‘தோராய பட்டா’ மட்டுமே வைத்திருக்கின்றனர். ஆன்லைன் பட்டா இருந்தால்தான் நிலத்தை வாங்கவோ, விற்கவோ முடியும்.

மேலும், காப்பீடு, கடனுதவி உள்ளிட்டவைகளை பெற முடியும் என்பதால் விவசாயிகள் சிக்கலில் இருக்காங்க. மாவட்டத்தின் ஒரு தாலுகாவில் மட்டுமே, ஆன்லைன் பதிவு கேட்டு வழங்கிய ஐந்தாயிரத்திற்கும் அதிக மனுக்கள், அளவீடு செய்கிற செட்டில்மென்ட் பிரிவு அலுவலகத்தில் குவிந்து கிடக்கிறதாம். இப்படி மாவட்டந்தோறும் பாதித்திருப்பவர்கள் பல ஆயிரங்கள் இருக்கிறதாம். ஆன்லைன் பதிவு தடைபட்டு போனதை பல ஆண்டுகளாக சரி செய்யாமல், கண்டுகொள்ளாமல் ‘உயர்மட்ட அதிகாரிகள்’ விட்டிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கைவிரிக்கின்றனராம்... ஆன்லைன் பட்டா கேட்டு மனு செய்துள்ள அத்தனை பேரையும் ஒருங்கிணைக்கும் காரியத்தையும் ஒரு சமூக அமைப்பு கையிலெடுத்திருக்கிறது.

ஓரிரு வாரங்களில் இந்த மாவட்டத்து மக்கள் திரண்டு, ‘ஆளும் அரசினை கண்டித்து’ மிகப்பெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனராம்... மக்களுக்கு ஆப்பு வைத்தால்... அரசுக்கு அவர்கள் திருப்பி ஆப்பு வைக்க மாட்டார்களா என்ன..’’ எனக்கூறிவிட்டு சிரித்தார் விக்கியானந்தா. ‘‘கரன்சி மழையால் நனைந்த அதிகாரியால்... ஊர் மக்கள் வீட்டுக்கு ஊர் சுற்றி போக வேண்டிய அவல நிலை ஏற்பட்டு இருக்காமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை பாலக்காடு ரோடு எட்டிமடை பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனம் உள்ளது. இந்நிறுவன வளாகத்தை ஒட்டி பொதுப்பாதை உள்ளது. இந்த பாதை வழியாகத்தான் பின்புறம் உள்ள ஊர்களுக்கு மக்கள் செல்லவேண்டும்.

ஆனால், கல்லூரி நிர்வாகத்தினர் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்து, தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து விட்டனர். இதனால், பின்னால் உள்ள ஊர்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. மக்கள் திண்டாடுகின்றனர். இதுபற்றி, பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். அவர், உரிய நடவடிக்கை எடுக்க மதுக்கரை தாசில்தாருக்கு உத்தரவிட்டார். தாசில்தார் அறிவுறுத்தலின்படி, துணை தாசில்தார் ஒருவர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, அளவீடு செய்தார். அப்போது, ஆக்கிரமிப்பு இருப்பது உண்மை என தெரியவந்தது.

இதுதொடர்பாக தாசில்தாரிடம் எழுத்துப்பூர்வமாக ரிப்போர்ட் கொடுத்தார். ஆனால், அவர், அதை வாங்கி வைத்துக்கொண்டு, ேமல்நடவடிக்கை எடுக்கவில்லை. பொது வழித்தடத்தை மீட்கவில்லை. கப்-சிப்...வென பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டார். இதனால பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டுக்கு நேரடியாக செல்ல முடியாமல் ஊர் சுற்றி போறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • military-helicopter5

  துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

 • 05-03-2021

  05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்