SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் பக்ருதீன் வளர்ந்தது எப்படி?

2013-10-05@ 04:29:42

மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவன் பக்ருதீன். இவனது தந்தை சிக்கந்தர் அலி போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இதனால் போலீஸ்காரர் மகன் பக்ருதீன் என அழைக்கப்பட்ட பக்ருதீனுக்கு நாளடைவில் ‘போலீஸ்‘ பக்ருதீன் ஆனான். தாயார் சையது மீரா. சகோதரர்கள் 2 பேர். முகம்மது மைதீன் பீடி,சிகரெட் வியாபாரம் செய்துவருகிறார். மற்றொரு சகோதரர் தர்வீஸ் மைதீன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்வானியை குண்டுவைத்து கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டான் பக்ருதீன்.  நெல்பேட்டையை சேர்ந்த பெண்ணை பக்ருதீன் திருமணம் செய்த நிலையில், சில மாதங்களிலேயே மனைவியைவிட்டு பிரிந்துவிட்டான். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகி இமாம் அலிக்கு நெருக்கமானவன் பக்ருதீன். 1995ல் விளக்குத்தூண் ஸ்டேஷனில் அடிதடியில் ஈடுபட்டதாக வும், பொது சொத்துக்களு க்கு சேதம் விளைவித்ததாக வும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் திடீர்நகரில் கொலை முயற்சி வழக்கு, 1996ல் அனுப்பானடியில் அழகர் என்பரை கொலை செய்ததாகவும், மீனாட்சி கோயிலில் வெடிகுண்டு வைத்ததாகவும், மதிச்சியத்தில் கொலை வழக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 7.3.2002ல்  துப்பாக்கியால் சுட்டு இமாம் அலியை தப்பவைத்ததாக திருமங்கலம் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2010ல் விளக்குத்தூணில் கொலை முயற்சி மற்றும் உதவி கமிஷனர் வெள்ளத்துரையை மிரட்டியது உள்ளிட்ட 2 வழக்குகள், 2011ல் பாஜ மூத்த தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயன்றதாக திருமங்கலம் தாலுகா போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 30 வழக்குகளுக் கும் மேல் பக்ருதீன் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டு தயாரிப்பதில் கில்லாடி: இமாம் அலி தப்பிய வழக்கில் 37 பேருக்கு தண்டனை வழங்கப்பட் டது. 7 பேருக்கு 7 ஆண்டும், 32 பேருக்கு 5 ஆண்டுகளும் தண்டனை விதிக் கப்பட்டது. இவர்களில் இமாம் அலி, சீனியப்பா, மாங்காய் பஷீ, முகம்மது இப்ராகீம் ஆகியோர் பெங்களூரில் 2002 செப்.29ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். 7 ஆண்டு தண்டனை பெற்ற போலீஸ் பக்ருதீன் ஐகோர்ட்டில் அப்பீல் செய் தான். அங்கும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான். இதன் பேரில் 2010ல் ஜாமீனில் வெளியே வந்தவன் பின்னர் போலீசில் சிக்கவில்லை.பக்ருதீன் தனது கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய ரிமோட் குண்டை  தயாரித்து 2011 அக்.28ல் பாஜ மூத்த தலை வர் அத்வானி வரும் பாதை யில் வைத்தான். அதிர்ஷ்டவசமாக இதை முன்கூட்டியே போலீ சார் பார்த்து அகற்றியதால் அத்வானி தப்பினார். அப்போது கைப்பற்றப்பட்ட குண்டு, தயாரித்த தொழில்நுட்பத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னரே போலீஸ் பக்ருதீன் எவ்வளவு ஆபத்தானவன் என்பதை போலீ சார் உணர்ந்து தீவிரமாக தேட துவங்கினர்.

 இந்த வழக்கில் 8 பேர் சிக்கியும் பக்ருதீன் சிக்கவில்லை.அடுத்தடுத்து கொலைகள்: ஊர் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் பக்ருதீன் ஆர்வம் கொண்டவன். அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. 2013 ஏப்.3ல் பெங்களூரில் பாஜ அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித் தது, ஜூலை முதல் தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், 19ம் தேதி சேலத்தில் தமிழக பாஜ பொதுச்செயலாளர் ஆடிட் டர் ரமேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  தேடப்பட்டு வரும் பக்ருதீன் மீது இந்த கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  நெல்லை கிச்சான் புகாரியுடன் சேர்ந்து பெங்களூர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டான் பக்ருதீன் என தகவல் வெளியானது. இதற்கிடையே மதுரை மேலமாசி வீதியில் பால்கடைக்காரர் சுரேஷ் கொலையிலும் போலீஸ் பக்ருதீன் தலைமையிலான கும்பல் செய் தது தெரிந்தது. அப்போது போலீசார் விசாரித்தபோதுதான் அவன் மதுரைக்கு அடிக்கடி வந்து சென்றதும், நண்பர்கள் பலரது வீடுகளில் தங்கியிருந்ததும் தெரிந்தது.  பக்ருதீனுடன்  கூட்டாளிகள் பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகியோர் மிக நெருக்கமாக செயல்பட்டுள்ளனர். பிலால் மாலிக் இந்து மக்கள் கட்சி தலைவர் காளிதாஸ் 2005 ஜூன் 22ல் மதுரையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவன். அப்போது அவருக்கு 17 வயது என்பதால், மைனர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான். பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அங்கு மோதலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது.

நெல்லை கும்பலுடன் நெருக்கம்: முகம்மது அனிபா நெல்லை மாவட் டம் தென்காசியை சேர்ந்த வன். தென்காசி நகர் இந்து முன்னணி தலைவர் குமாரபாண்டியன் 2006ல் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக நெல்லை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் மைதீன் ஷேக்கான் கொல்லப்பட்டார். குமார பாண்டியன் கொலை வழக்கில் முகம்மது அனிபா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த 2 கொலை வழக்கு குற்றவாளிகளும் 2007 ஆகஸ்ட்டில் மோதிக்கொண்டதில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கிலும் முகம் மது அனிபா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள் ளான். இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கவும், விசாரணை, ஜாமீன் பெற்றபோதும் மதுரையில் பதுங்கியிருக்க பக்ருதீன் உதவினான். இந்த பழக்கம் நெல்லையை சேர்ந்த பலருடன் நெருக்கமாக பழக பக்ருதீனுக்கு முகம்மது அனிபா மூலம் வாய்ப்பு கிடைத்தது. இப்படித்தான் கிச்சான் புகாரியுடன் பக்ருதீனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

sms spy app click spy apps free
sinemet megaedd.com sinemet
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
how do abortion pill work pristineschool.com misoprostol abortion

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

  • asssss

    ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு

  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்