தேஜஸ் ரயில் நிறுத்தப்படும் என்ற முடிவை திரும்பப் பெற்றது மத்திய அரசு : மக்களின் குரலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என எம்.பி. சு வெங்கடேசன் கருத்து
2021-01-07@ 10:46:47

சென்னை : சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் ரயில் நிறுத்தப்படும் என்ற முடிவை திரும்பப் பெற்ற மத்திய ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மதுரை - சென்னைக்கு இடையில் இயங்கும் தேஜஸ் விரைவு வண்டிகளை ஜனவரி 4ம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. குறைவான பயணிகள் வருகை இருந்ததால் தேஜஸ் ரயிலை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்திருந்தது. இதனை வன்மையாக கண்டித்த மதுரை எம்.பி. சு வெங்கடேசன்,மதுரை - சென்னை இடையே இயங்கும் தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும் என்று ரயில்வேதுறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அவர் எழுதியிருந்த கடிதத்தில், 'இது கொள்ளைநோய் காலம். மக்கள் கூட்டமாக செல்வது தவிர்க்கவேண்டிய ஒன்று .இந்த சூழ்நிலையில் முழு அளவில் பயணிகள் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கொள்ளைநோய் காலத்தில் ஏற்புடையது அல்ல. அதுவும் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணம் கோவிட் சார்ந்த அச்சங்களை அதிகம் கொண்டது.அப்படி இருந்தும் குறைந்தபட்சம் 30 சதவீதத்திற்கு மேல் பயணிகள் வருகை இருப்பதாக அறிகிறோம். எனவே கொள்ளைநோய் காலத்தில் அவசர காரணங்களுக்கு பயணம் செய்யும் சாதாரண மக்களை கருத்தில் கொண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ்களை ரத்து செய்வதை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்,' என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரை - சென்னை இடையே ஜனவரி 10 முதல் தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ள சு. வெங்கடேசன், 'மக்களின் குரலுக்கு மாபெரும் வெற்றி.சென்னை-மதுரையிடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் 4ம் தேதி முதல் நிறுத்தப்படும் என்ற முடிவினை கைவிட வேண்டுமென கடந்த வாரம் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினேன். இதன் தொடர்ச்சியாக வரும் 10ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சருக்கு எனது நன்றி🙏🏽,' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
யோகி பாபு நடித்த மண்டேலா படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்: மத தலைவர்கள் உறுதி
எம்ஜிஆர் நகர் மயானம் ஓராண்டு இயங்காது
பிரபல தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் கொரோனா நோயாளி தற்கொலை: உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கை ஒதுக்க அரசு உத்தரவு
நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வில் தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்