மேற்கு வங்கத்தில் பாஜக அசுர வேட்டை..சிதறுகிறது திரிணாமுல் காங்கிரஸ்: மீண்டும் ஒரு அமைச்சர் ராஜினாமாவால் மம்தா பானர்ஜி அதிர்ச்சி
2021-01-05@ 16:03:59

கொல்கத்தா : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பாஜ.வின் அசுரத்தனமான அரசியல் வேட்டை ஆரம்பித்துள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜ தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக, பாஜக விரித்த வலையில் சிக்கி, திரிணாமுல் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக விலக தொடங்கினர். சில வாரங்களுக்கு முன், மம்தாவின் அரசில் போக்குவரத்து அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், லட்சுமி ரத்தன் சுக்லா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் இருப்பினும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே சமயம், ஹவுரா மாவட்ட செயலாளர் பதவியையும் லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான லட்சுமி ரத்தன் சுக்லா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்எல்ஏவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கொரோனா பாதிப்பு எதிரொலி: ஜைடஸ் காடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை அவசரதேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து அமைப்பு அனுமதி..!
புத்தக வாசிப்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி!: உலக புத்தக தினத்தை முன்னிட்டு அமேசான் கிண்டிலில் சலுகைகள் அறிவிப்பு..சலுகை விலையில் சந்தா; ஆடியோ புத்தகங்கள் இலவசம்..!!
ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தெரியாம எடுத்துட்டேன்..! மன்னிச்சுக்கோங்க..! தடுப்பூசி என தெரியாது: திருடிய கொரோனா தடுப்பூசிகளை கடிதத்துடன் திருப்பி வைத்து சென்ற திருடன்
மே, ஜூன் மாதத்திற்கு தலா 5 கிலோ தானியங்கள் இலவசமாக விநியோகம்: பிரதமர் மோடி அறிவிப்பு
ஆந்திராவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு ரயிலில் 150 டன் ஆக்சிஜன் கொண்டு செல்ல ஏற்பாடு..!
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!