இவ்வளவு அவசரமாக அறிவிக்கப்படும் தடுப்பூசியை மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாமா : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அதிரடி
2021-01-05@ 15:06:54

சென்னை : இவ்வளவு அவசரமாக அறிவிக்கப்படும் தடுப்பூசியை மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாமா என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசியை அவசரக்கால பயன்பாட்டுப் போடுவதற்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய அரசு.மத்திய அரசின் இந்த முடிவுக்கு சிபிஎம் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மாற்று கருத்தை முன் வைத்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவில்,
“தடுப்பூசி அவசரமானது அவசியமானது' என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சரியான மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளின்றி அனுமானத்தின் அடிப்படையில் கோவாக்சுனுக்கு அனுமதி அளித்திருப்பது, இந்திய ஆய்வுக்கட்டமைப்பை நம்பிக்கையையே சிதைப்பதாக உள்ளது. ஒரு வாக்சினின் பாதுகாப்பு குறித்து தெளிவான உலக ஆய்வு வரையறை உள்ளது. இந்த அனுமதியும் அங்கீகாரமும் அந்த வரையறையின் படி அமையவில்லை. எந்த ஆய்வுச்சட்டத்தின் வழிகாட்டுதலில் மத்திய அரசு அனுமதித்துள்ளது? என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை அரைகுறை ஆய்வுகளோடு வெளிவரும் கோவாக்சின் ஏதேனும் பெரும் பிரச்சினையைக் கிளப்பினால் அது கோவாக்சினின் தோல்வியாக மட்டும் முடியாது. ஒட்டுமொத்தமாக வாக்சின்கள் மீதான நம்பிக்கையையே சிதைத்துவிடும்.
வெகுசன மக்கள் தடுப்பூசிகளையே புறக்கணிக்கத் துவங்கினால் அதன் விளைவு கொடிதினும் கொடிது. தவறான வாக்சின் அந்த வைரசையே பலம் பொருந்திய வீரியமானதாக மாற்றிவிடக் கூடாது. கூடவே' இப்போதைய புதிய வீரிய வைரசுக்கும் இத்தடுப்பூசி பயன்படும்;110 சதவீத பாதுகாப்பு' என்றெல்லாம் கூச்சலிடுவது இந்திய அறிவியல் உலகையே எள்ளி நகையாடச்செய்கின்றது. 'தற்சார்பு, இந்திய தயாரிப்பு' சித்தாந்தங்களை தன் அரசியல் ஆயுதமாக எடுக்கும் பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு போலத்தான் இந்த அவசரகதி அங்கீகாரம் உள்ளது,'என்று பதிவிட்டுள்ளார். மேலும், 'இவ்வளவு அவசரமாக அறிவிக்கப்படும் தடுப்பூசியை மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாமே' என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் செய்திகள்
தினசரி பாதிப்பு 11,000-ஐ நெருங்கியது: தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 44 பேர் பலி; 75,116 பேருக்கு சிகிச்சை...சுகாதாரத்துறை அறிக்கை.!!!
கொரோனா தடுப்பூசி தயாரிக்க செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்.!!!!
கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளியுங்கள் : தமிழக அரசுக்கு உத்தரவு!!
மதுப்பிரியர்கள் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்: புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்.!!!!
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் சுருங்கிவிட்டதாக உயர்நீதிமன்றம் வேதனை
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு : நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி மனு
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!