ஹால் டிக்கெட்டில் தாய் என சன்னி லியோன் பெயர்!
2021-01-04@ 16:48:12

நன்றி குங்குமம்
வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளில் உரிய நபருக்கு பதிலாக பிரபலங்களின் படங்களும், விலங்குகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதை பார்த்திருக்கிறோம். ஆனால், சற்று விநோதமாக பீகாரில் இளங்கலை 2ம் ஆண்டு படிக்கும் மாணவனின் ஹால் டிக்கெட்டில் அவரது தந்தை, பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மி என்றும், தாய் நடிகை சன்னிலியோன் என்றும் அச்சிடப்பட்டிருந்தது! இருப்பிட முகவரி, பாலியல் தொழிலுக்கு பெயர்பெற்ற இடமான சட்டர்புஜ் ஸ்தான் எனக் குறிப்பிடப்பட்டிருந்து.
சமூகவலைத்தளங்களில் வைரலான இந்த ஹால்டிக்கெட்டின் ஸ்கிரீன் ஷாட்டை பார்த்த பீகார் மாநில அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் ராம் கிருஷ்ண தாகூர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.‘‘ஹால்டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள தகவலுக்கு முழுப்பொறுப்பும் மாணவன் மட்டுமே. இருப்பினும் முழுமையான விசாரணைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...’’ என்கிறார் ராம் கிருஷ்ண தாகூர்.
‘‘சத்தியமாக அவர் என் குழந்தை இல்லை...’’ என விளக்கம் அளித்துள்ளார் நடிகர் இம்ரான் ஹஸ்மி.சன்னி லியோன் இன்னும் பதில் அளிக்கவில்லை!
அன்னம் அரசு
Tags:
சன்னி லியோன்மேலும் செய்திகள்
கொலம்பியாவை மிரட்டும் நீர்யானைகள்!
உங்க ரத்தத்துக்கு என்ன டயட்?
மியாவ் மியாவ் பூனைக்குட்டி! : பூனை வளர்ப்பது எப்படி?
அம்பானியே ஆளனுப்பி அழைத்தார்! : யார் இவர்?
மரவள்ளிக் கிழங்கின் கதை
2வது அலை கொரோனாவின் புதிய அவதாரம்: அச்சுறுத்தும் 8 அறிகுறிகள்..! அலட்சியம் செய்தால் ஆபத்து
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!