மும்பை தாக்குதல் மூளை லக்வியை கைது செய்தது பாக்.
2021-01-03@ 03:09:18

லாகூர்: மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளி லக்வியை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி பத்துக்கும் மேற்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக நுழைந்து நடத்திய பயங்கர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஜாகிர் ரஹ்மான் லக்வி மூளையாக செயல்பட்டான். இது தொடர்பான வழக்கில் ஜாமீனில் வெளிவந்த இவன் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றினான். இந்நிலையில், ஐநா.வினால் தடை விதிக்கப்பட்ட தீவிரவாதியான லக்வியை, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தீவிரவாத ஒழிப்பு துறையினர் நேற்று திடீரென கைது செய்தனர். ஆனால், பஞ்சாபில் அவனை எங்கு கைது செய்தனர் என்ற விவரத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.
மேலும் செய்திகள்
நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா
கொரோனா சிகிச்சைக்கு ராணுவம் உதவ வேண்டும்: ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தேவை இல்லை: பிரதமர் மோடி அறிவிப்பு
கும்பமேளாவுக்கு வந்த மாஜி மன்னருக்கு தொற்று
ராகுலுக்கு தொற்று உறுதி
உற்பத்தியை அதிகரிக்க முன்பணமாக தடுப்பூசி நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடி: மத்திய அரசின் அறிவிப்பால் சீரம் உற்சாகம்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்