சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு கட்சியில் சேர்ந்த கபிலை உடனடியாக நீக்கியது பாஜ
2020-12-31@ 00:48:13

புதுடெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குஜ்ஜார், பாஜ கட்சியில் சேர்ந்த அடுத்த சில மணி நேரத்தில் நீக்கப்பட்டார். குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த பிப்ரவரியில் பெரியளவில் போராட்டம் நடந்தது. அப்போது, போராட்டத்தில் கபில் குஜ்ஜார் என்ற வாலிபர், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசார் அவரை பிடித்து சென்றனர். அப்போது ‘இந்தியாவை இந்துக்கள் மட்டுமே ஆள வேண்டும்’ என கோஷமிட்டபடி சென்றார். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கபில் குஜ்ஜார் பாஜ கட்சியில் இணைந்தார். பாஜ உள்ளூர் நிர்வாகி ஒருவர் கபிலுக்கு இனிப்பு ஊட்டி மாலை அணிவித்து கவுரவிப்பதாக வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. அடுத்த சில மணி நேரத்திலேயே கபிலை கட்சியிலிருந்து நீக்கி பாஜ மேலிடம் அறிவித்தது. கபிலின் கடந்த கால வரலாறு தெரியாமல் அவரை கட்சியில் சேர்த்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
சார்தாம் யாத்திரையில் 57 பக்தர்கள் உயிரிழப்பு: மருத்துவ முகாம்கள் அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் வரி குறைப்பு மூலம் மக்களை முட்டாளாக்க வேண்டாம்: ராகுல் காந்தி கடும் தாக்கு
சட்ட விரோதமாக நுழைந்த வழக்கு மெகுல் சோக்சி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது டொமினிகா நீதிமன்றம்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கல்
ஜார்க்கண்ட்டில் தேர்தல் பேரணி பாக். ஆதரவு கோஷம் 62 பேர் மீது வழக்கு
தெரு நாய்கள் துரத்தியதால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்