வால்பாறையில் சோகம்!: காட்டு யானை தாக்கியதில் பெண் தேயிலைத் தோட்ட தொழிலாளி உயிரிழப்பு..!!
2020-12-30@ 17:32:15

கோவை: வால்பாறையில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வால்பாறை அடுத்துள்ளது நல்லகாத்து எஸ்டேட். அங்குள்ள தேநீர் தோட்டம் ஒன்றில் பல பெண்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் தோட்டத்தில் பணியாற்றும் ஜெயமணி (56) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் அப்பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முயற்சித்துள்ளனர். அச்சமயம் வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையானது 3 பெண் தொழிலாளர்களை விரட்டியுள்ளது. இதில் இருவர் விரைந்து அப்பகுதியில் இருந்து தப்பித்துவிட்டனர். ஆனால் காட்டு யானையின் பிடியில் இருந்து தொழிலாளி ஜெயமணியால் தப்ப முடியவில்லை.
காட்டு யானையானது ஜெயமணியை காலால் மிதித்து கொன்றது. அதே இடத்தில் யானை முகாமிட்டுள்ளதால் யாரும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயமணி உயிரிழந்ததை கூட உறுதி செய்ய முடியாமல் சக தோட்டத் தொழிலாளர்கள் தவித்தனர். சம்பவம் தொடர்பாக தோட்ட அதிகாரிக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மானாமல்லி வனச்சரக வனத்துறையினர், ஜெயமணியின் உடலை மீட்க முயற்சி செய்தனர். இருப்பினும் கிட்டத்தட்ட 1 மணி நேரமாக யானை அப்பகுதியில் முகாமிட்டதால் உடலை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
தொடர்ந்து, யானையை அனைவரும் சேர்ந்து விரட்டியடித்து ஜெயமணியின் உடலை மீட்டனர். பின்பு உடலானது வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காட்டு யானை தாக்கி தோட்ட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறையில் அடர்வனப்பகுதியை விட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
மேலும் செய்திகள்
இரவுநேர ஊரடங்கால் விவசாயிகள் அவதி: விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் அதிகரிப்பு!: 2 மாதத்தில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு..மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!
திருச்சி அரசு மருத்துவமனையில் நரக வேதனையை அனுபவிக்கும் கொரோனா நோயாளிகள்
வானாபாடி ஊராட்சி மாணிக்கம் நகரில் ஆபத்தான மின்சார டிரான்ஸ்பார்மர்: மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கடந்தாண்டு கன்றுக்குட்டி கடித்ததில் தாடை கிழிந்தது; மலை அடிவாரத்தில் சிக்கிய 2 நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு: கோர்ட் உத்தரவுபடி அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது
மாட்டுத்தொழுவமாக மாறிய மேலூர் தாலுகா வளாகம்: பொதுமக்கள் அவதி
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!