அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ 1,100 கோடி செலவாகும்.. 3½ ஆண்டுகளுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும் :அறக்கட்டளை தகவல்
2020-12-29@ 16:28:53

லக்னோ : உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ரூ.1,100 கோடி செலவில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் தெரிவித்துள்ளார். அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமி குறித்த வரலாற்றையும், தொல்லியல் உண்மைகளையும் ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கட்டுமானப் பணிகளைத் தொடங்க மத்திய அரசுக்கு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 5 கோபுரங்கள் மற்றும் 3 தளங்களுடன் இக்கோயில் கட்டப்பட உள்ளது. இரும்புகளைப் பயன்படுத்தாமல் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இளஞ்சிவப்பு கிரானைட் கற்கள் கொண்டு கோயில் கட்டப்படும்.
இந்த நிலையில் அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரிஜி மஹராஜ் நிரூபர்களிடம் கூறியதாவது,'மூலம் ராமரை பிரதிஷ்டை செய்ய உள்ள கோவில் கட்டுவதற்கு மட்டும் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் கோவில் உட்பட ஒட்டுமொத்த வளாகத்தையும் அமைப்பதற்கான செலவு ரூ.1,100 கோடிக்கு குறையாமல் இருக்கும். மும்பை, டெல்லி சென்னை, கவுகாத்தி ஆகிய ஐ.ஐ.டி.களின் வல்லுனர்கள் ‘எல் அண்ட் டி’ மற்றும் ‘டாடா’ குழுமத்தின் சிறப்பு பொறியாளர்கள் இந்த வளாகத்தின் வலுவான அடித்தள திட்டத்தை வகுக்க ஆலோசித்து வருகின்றனர். மத்திய அரசு அமைத்துள்ள இந்த அறக்கட்டளைக்கு இதுவரை இணையம் வழியாக ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடைகள் கிடைத்துள்ளன.இருப்பினும் நாங்கள் 4 லட்சம் கிராமங்களையும், 11 கோடி குடும்பங்களையும் சென்றடைவோம். இதனால் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இந்த முயற்சியில் பங்கேற்க முடியும்.3.5 ஆண்டுகளுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும்,'என்றார்.
மேலும் செய்திகள்
கடந்த ஆண்டைப்போன்று மீண்டும் அரங்கேறும் பரிபாதக் காட்சிகள்: நெடுஞ்சாலைகளில் நடக்கத் தொடங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள்
பலூன்களால் அலங்கரித்தல்... சாதனைகளை விளக்கும் உரை...புகைப்படம் எடுத்தல் :ஆக்சிஜன் லாரியை வைத்து அற்ப விளம்பரம் செய்த பாஜக!!
சித்தூரில் நோய் தொற்று அபாயம் நீவா நதியில் கலக்கும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சுழி தொகுதி தேர்தல் விவகாரம்!: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
கும்பமேளாவில் பங்கேற்ற 19 கொரோனா நோயாளிகள் உத்தராகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் :பீதியில் வடஇந்தியா!!
டெல்லியில் இன்று இரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று நேரத்தில் வெளியிடுகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!