திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் 9-வது இடம்: கொரோனா முடக்கத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய சிறந்த 10 எம்.பி.க்கள் பட்டியல் வெளியீடு..!!!
2020-12-23@ 21:47:54

டெல்லி: கொரோனா பொது முடக்கத்தின்போது மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி சிறந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் தமிழச்சி தங்கபாண்டியன் இடம் பிடித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி பொது முடக்கத்தை அறிவித்தார். தற்போது, கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இதற்கிடையே, கொரோனா பொது முடக்கத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து டெல்லியைச் சேர்ந்த ஐ சிஸ்டம்ஸ் கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஆய்வு நடத்த தொடங்கியது. அந்தந்த தொகுதி மக்களின் கருத்துகளின் அடிப்படையில் தற்போது, மக்களுக்கு சேவையாற்றிய முதல் 10 நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலை கவர்ன் ஐ தனது www.governeye.co.in/survey/result வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், திமுக தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இடம் பிடித்துள்ளார்.
பட்டியலில் இடம் பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு:
1. அனில் ஃபிரோஜியா (பாஜக)- மத்தியப் பிரதேசம்-உஜ்ஜைன் நாடாளுமன்ற தொகுதி.
2. அதலா பிரபாகர ரெட்டி (ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி) – ஆந்திரப் பிரதேசம்- நெல்லூர் நாடாளுமன்ற தொகுதி.
3. ராகுல் காந்தி (காங்கிரஸ்)- கேரளா-வயநாடு நாடாளுமன்ற தொகுதி.
4. மஹுவா மொய்த்ரா (திரிணாமூல் காங்கிரஸ்)- மேற்கு வங்கம் - கிருஷ்ணாநகர் நாடாளுமன்ற தொகுதி.
5. எல்.எஸ். தேஜஸ்வி சூர்யா (பாஜக)- கர்நாடகா- பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதி.
6. ஹேமந்த் துக்காராம் கோட்சே (சிவசேனா)- மகாராஷ்டிரா- நாசிக் நாடாளுமன்ற தொகுதி.
7. சுக்பீர் சிங் பாடல் (எஸ்ஏடி), பஞ்சாப்- ஃபெரோஸ்பூர் நாடாளுமன்ற தொகுதி.
8. சங்கர் லால்வானி (பாஜக)- மத்தியப் பிரதேசம்- இந்தூர் நாடாளுமன்ற தொகுதி.
9. டாக்டர் டி.சுமதி (எ) தமிசாச்சி தங்கபாண்டியன் (திமுக) – தமிழ்நாடு சென்னை தெற்கு நாடாளுமன்ற தொகுதி.
மேலும் செய்திகள்
சித்தூரில் நோய் தொற்று அபாயம் நீவா நதியில் கலக்கும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சுழி தொகுதி தேர்தல் விவகாரம்!: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
கும்பமேளாவில் பங்கேற்ற 19 கொரோனா நோயாளிகள் உத்தராகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் :பீதியில் வடஇந்தியா!!
டெல்லியில் இன்று இரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று நேரத்தில் வெளியிடுகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா. பிரதமர் மோடி அவசர ஆலோசனை : முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறாரா ?
கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் ஒரு வாரம் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த திட்டம்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!