உபி.யில் பரிதாபம் கார் மீது லாரி மோதல் தீப்பிடித்து 5 பேர் பலி
2020-12-23@ 00:44:42

ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருந்து லக்னோ நோக்கி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் 5 பேர் பயணித்தனர். ஆக்ரா அருகே, கார் வளைவில் திரும்பிய போது, டீசல் ஏற்றி வந்த டாங்கர் லாரி இவர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில், கார் தீப்பிடித்தது. காரில் உள்ள சென்ட்ரல் லாக் சிஸ்டத்தினால் அவர்களால் காரில் இருந்து தப்பி வெளியேற முடியவில்லை. இதனால், காரில் இருந்த 5 பேரும் உடல் கருகி பலியாகினர். விபத்து குறித்து அப்பகுதியில் பூத் நடத்தி வரும் நபர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் வரும் முன்பாக, கார் முழுவதும் எரிந்து விட்டிருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் அவற்றை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய டாங்கர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கொரோனா பரவலை சமாளிக்க மத்திய அரசு செய்ய வேண்டிய 5 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்!
சோனு சூட், சுமித் வியாசை தொடர்ந்து 2 பாலிவுட் நடிகர்களுக்கு கொரோனா
கேரளாவுக்கு ரயிலில் கடத்திய 36.50 லட்ச ரூபாய் சிக்கியது
நாயை ஸ்கூட்டரில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்: கேரளாவில் பரபரப்பு
கொரோனா பரவல் எதிரொலி மேற்குவங்கத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து
கிருஷ்ணரை மட்டும் ஓவியமாக வரையும் முஸ்லிம் இளம்பெண்: குருவாயூர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்குகிறார்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்